»   »  அ ஆ.. இ ஈ... உ ஊ... அதிதிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் மணி!

அ ஆ.. இ ஈ... உ ஊ... அதிதிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் மணி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டைரக்டரே வாத்தியார் ஆவது சினிமாவில் ரொம்ப சகஜம். அந்த வகையில் மணி ரத்தினம் இப்போது தனது பட நாயகி அதிதி ராவ் ஹைதரிக்கு வாத்தியார் ஆகியுள்ளார்.

Select City
Buy Kaatru Veliyidai (U) Tickets

தமிழில் எப்படிப் பேசுவது, வசனத்தை எப்படி உச்சரிப்பது என்று அதிதியை உட்கார வைத்து அழகாக சொல்லிக் கொடுக்கிறாராம் மணி ரத்தினம்.


காற்று வெளியிடை.. இது மணி இயக்கும் புதிய படம். கார்த்தி, அதிதி ஜோடியாக நடிக்கிறார்கள். படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.. இந்தப் பின்னணியில் படத்தில் அதிதியே டப்பிங் பேசவுள்ளதால் அவரது தமிழை திருத்தும் வேலையை தானே கையில் எடுத்துக் கொண்டுள்ளாராம் மணி ரத்தினம்.


நல்ல தமிழ் பேச வேண்டும்

நல்ல தமிழ் பேச வேண்டும்

அதிதிக்கு வசன உச்சரிப்பு, பேசும் பேச்சு, முக பாவனை சரியாக வர வேண்டும் என்பதில் மணிரத்தினம் அக்கறை காட்டுகிறாராம். அவரது தமிழ் சரியாக இருக்க வேண்டும் என்பதிலும் மணி தீவிரம் காட்டுகிறாராம்.


அவரே சொல்லிக் கொடுக்கிறார்

அவரே சொல்லிக் கொடுக்கிறார்

இதனால் வசனங்களை எப்படி உச்சரிப்பது, எந்த வார்த்தையை எப்படிச் சொல்ல வேண்டும். எங்கு அழுத்தம் தர வேண்டும் என்பது போன்றவற்றை மணி ரத்தினம் அதிதிக்கு அழகாக விளக்கிக் கூறுகிறாராம்.


ஒரு மாசமா நடக்குதுங்க

ஒரு மாசமா நடக்குதுங்க

கடந்த ஒரு மாதமாக அதிதிக்கு தமிழ் டியூஷன் நடத்தி வருவதாக யூனிட்டைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். மணிரத்தினமே தனக்கு தமிழ் சொல்லித் தருவதால் அதிதி ரொம்ப ஹேப்பியாகி விட்டாராம். சின்சியராக கற்றுக் கொண்டுள்ளாராம்.


முதல் படம்

முதல் படம்

அதிதிக்கு இதுதான் தமிழில் முதல் படம். எனவே அவரும் ரொம்ப ஆர்வமாக உள்ளார். மணிரத்தினம் வேறு தமிழ் சொல்லிக் கொடுத்திருப்பதால் அவரது தமிழ் உச்சரிப்பைக் கேட்டு ரசிக்க ரசிகர்களும் கூட ஆர்வமாகத்தான் உள்ளனர்.


English summary
Director Manirathnam is teaching the nuances Tamil pronunciation to his heroine Aditi Rao Hydari.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos