»   »  பாபநாசம்... கமல், கவுதமிக்கு 'ஒரிஜினல் நாயகி' பாராட்டு!

பாபநாசம்... கமல், கவுதமிக்கு 'ஒரிஜினல் நாயகி' பாராட்டு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

பாபநாசம் படத்தில் சிறப்பாக நடித்திருந்ததாக கமல், கவுதமிக்கு அந்தப் படத்தின் ஒரிஜினல் நாயகியான மீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் த்ரிஷ்யம். ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் வெற்றியைக் குவித்த படம் இது.

இதன் தெலுங்குப் பதிப்பிலும் மீனாதான் நாயகியாக நடித்திருந்தார். தமிழில் மோகன்லால் கேரக்டரில் கமலும், மீனா வேடத்தில் கவுதமியும் நடித்துள்ளனர்.

மீனா

மீனா

பாபநாசம் படம் மீனாவுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படம் அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. கமலையும், கவுதமியையும் பாராட்டியுள்ளார்.

புது நிறம்

புது நிறம்

த்ரிஷ்யம் படத்தில் மலையாளம், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நான் நடித்தேன். தமிழில் ரீமேக் பாபநாசத்தில் கமல் மிகவும் நன்றாக நடித்து இருக்கிறார். படத்துக்கு புது நிறத்தை கமல் கொடுத்து இருக்கிறார்.

ப்ளஸ்

ப்ளஸ்

குறிப்பாக அந்த படத்துக்கு நெல்லை தமிழில் பேசியிருப்பது பெரிய ப்ளஸ்ஸாக உள்ளது. கவுதமியும் ரொம்ப நன்றாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே நான் கவுதமி வேடத்தில் நடித்து இருக்கிறேன். கவுதமி கேரக்டரில் நிறைய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழுக்கு ஏற்ற மாதிரி நடித்து இருக்கிறார்," என்றார்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது மீனாவையே நாயகியாக முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால் இயக்குநர் ஜீத்து ஜோசப்தான் கவுதமியே நடிக்கட்டும் என்று முடிவு செய்ததாக கமல் கூறியது நினைவிருக்கலாம்.

English summary
Dhrishyam heroine Meena has praised Kamal Hassan and Gouthami after watched Papanasam movie.
Please Wait while comments are loading...