»   »  விஜய் படத்தில் நானா? மியா ஜார்ஜ் அவசர மறுப்பு!

விஜய் படத்தில் நானா? மியா ஜார்ஜ் அவசர மறுப்பு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக வெளியான தகவல்களை மியா ஜார்ஜ் மறுத்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் இப்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் தெறி திரைப்படத்தின் முதல் பார்வை டிசைன்கள் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கின்றன. தெறி நிச்சய வெற்றி என்பதே, புலியால் மனம் நொந்த ரசிகர்களின் குரலாய் ஒலிக்கிறது.

ஜோடி யார்?

இந்த நேரத்தில் விஜய்யை வைத்து பரதன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கப் போகிறவர் மியா ஜார்ஜ் என்று ஒரு செய்தி வெளியானது.

சமூக வலைத் தளங்களில்

இது விஜய் ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகமளித்தது (எத்தனை நாளைக்கு திருப்பித் திருப்பி சமந்தா, ஸ்ருதிஹாஸன், காஜல்னு பார்க்கறது!). சமூக வலைத் தளங்களில் இந்தத் தகவலைப் பரப்பி வந்தனர்.

மறுப்பு

ஆனால் ஃபேஸ்புக் மூலம் அவர்களது மகிழ்ச்சியை தகர்த்துவிட்டார் மியா ஜார்ஜ். ‘எனக்கு ஃபேஸ்புக்கில் மட்டும் தான் அக்கவுண்ட் இருக்கிறது. ட்விட்டரில் என் பெயரில் இயங்கும் அக்கவுண்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று கூறிவிட்டார்.

தொடரும் ஏமாற்றம்

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத திரையுலக நட்சத்திரங்களின் சமூக வலைதள அக்கவுண்டில் இருந்து வெளியாகும் தகவல்களை நம்பி ரசிகர்கள் செய்திகளைப் பகிர்வதும் பின்னர் ஏமாறுவதும் தொடர்கிறது.

English summary
Actress Mia George has denied reports on her role in Vijay's next movie directed by Bharathan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos