»   »  விஜய் பட நடிகை மித்ரா குரியன் திருமணம்

விஜய் பட நடிகை மித்ரா குரியன் திருமணம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

விஜய்க்கு ஜோடியாக நடித்த மித்ரா குரியனுக்கும், கேரளாவை சேர்ந்த இசை கலைஞர் வில்லியம்ஸுக்கும் நேற்று திருமணம் நடந்தது.

விஜய் நடித்த ‘காவலன்' மற்றும் ‘நந்தனம்' ஆகிய படங்களில் நடித்தவர் மித்ரா குரியன். இவருக்கும், கேரளாவை சேர்ந்த இசை கலைஞர் வில்லியம்ஸுக்கும் காதல் மலர்ந்தது.

பெற்றோர் சம்மதத்துடன்..

பெற்றோரும் இந்தக் காதலை ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மித்ரா குரியனுக்கும், வில்லியமுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். அதன்படி 2 பேருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருச்சூரில்

மித்ரா குரியன்-வில்லியம் திருமணம் கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடந்தது.

வரவேற்பு

அதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமான உறவினர்கள்-நண்பர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தொடர்ந்து நடிப்பேன்

திருமணம் முடிந்ததும் நடிகை மித்ரா குரியன் கூறுகையில், "பெற்றோர்கள் சம்மதத்துடன் இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறோம். திருமணத்துக்கு பிறகும் நான் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு வில்லியமும், அவருடைய பெற்றோரும் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்,'' என்றார்.

English summary
Actress Mithra Kurian - Musician Williams marriage was held at Trissur on Tuesday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos