»   »  நான் ஒரு திறந்த புத்தகம்.. சொல்வது உங்கள் அன்புக்குரிய சன்னி லியோன்!

நான் ஒரு திறந்த புத்தகம்.. சொல்வது உங்கள் அன்புக்குரிய சன்னி லியோன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் எந்த ரகசியமும் இல்லை என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

நானும் மற்ற பெண்களைப் போலத்தான். நானும் மற்ற நடிகைகளைப் போலத்தான். என்னிடம் விசேஷம் என்று எதுவும் இல்லை என்றும் சன்னி லியோன் கூறியுள்ளார்.

மற்றவர்களைப் போல தானும் கூட சுயசரிதையை எழுதலாம் என்று கூறும் அவர், ஆனால் எனது வாழ்க்கை ஏற்கனவே திறந்த புத்தகமாக உள்ளபோது புதிதாக கூற ஏதும் இருக்காது என்று கூறுகிறார் சன்னி.

இதுதொடர்பாக சன்னி அளித்துள்ள ஒரு பேட்டியிலிருந்து...

திறந்த புத்தகம்

எனது வாழ்க்கை ஏற்கனவே ஒரு திறந்த புத்தகம்தான். இதில் ரகசியம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

 

சூப்பர் ஹீரோ படத்தில் நான்

நானே தயாரித்து நடிக்கும் படத்தில் நான் சூப்பர் உமனாக நடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அதில் உண்மையில்லை. இது சூப்பர் ஹீரோ படம். இன்னும் ஆரம்ப நிலையில்தான் அது உள்ளது.

தீவிர ஆலோசனை

பல கார்டடூனிஸ்டுகள், கிராபிக் டிசைனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். படம் நன்றாக வர வேண்டும் என்ற கவலையும் உள்ளது. எதுவும் இன்னும் இறுதியாகவில்லை.

தயாரி்ப்பதும் சுகம்தான்

பலரும் தயாரிப்பாளர்களாகி வருகின்றனர். நானும் அதில் இணைந்துள்ளேன். அதில் மகிழ்ச்சியே. அதுவும் கூட சுகமான அனுபவம்தான்.

 

 

பல கோணங்களில் வளர வேண்டும்

இன்றுள்ள நடிகர், நடிகையர் பல கோணங்களில் வளர ஆசைப்படுகின்றனர். அதி்ல் தவறில்லை. நானும் கூட அந்த முயற்சியில்தான் இறங்கியுள்ளேன். அதற்கு இதுதான் சரியான நேரமும் கூட என்றார் சன்னி லியோன்.

 

 

English summary
Sultry actress Sunny Leone says that like other actors, she could also pen her life story in a tell-all book. “My life is pretty much an open book already. And it might be something I may end up doing.”
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos