»   »  நாளுக்கு ரூ.1 கோடி தரேன், ஆனால் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: நயன் அடம்

நாளுக்கு ரூ.1 கோடி தரேன், ஆனால் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: நயன் அடம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா அஜீத்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க விரும்புகிறாராம். அதுவும் அஜீத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி சம்பளம் அளிக்கவும் அவர் தயாராக உள்ளாராம்.

கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. நயனுக்கு தயாரிப்பாளர் ஆகும் ஆசை வந்துள்ளது. விக்னேஷ் சிவனை இயக்குனராக போட்டு படத்தை தயாரிக்க உள்ளார் நயன்தாரா.

முதல் படத்தில் பெரிய ஹீரோவை நடிக்க வைப்பது நல்லது என்று விக்னேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.

தல

முதல் படத்தில் பெரிய ஹீரோவா அப்படி என்றால் அஜீத் குமாரை ஒப்பந்தம் செய்யலாம் என நயன்தாரா தெரிவித்துள்ளார். இதையடுத்து கால்ஷீட் கேட்டு அஜீத்தை அணுகியுள்ளார் விக்னேஷ்.

பிசி

அஜீத் 2018ம் ஆண்டு வரை ரொம் பிசியாக உள்ளார் என்பதை அறிந்து கொண்டார் விக்னேஷ். இதையடுத்து அவர் அஜீத்திடம், சார் நயன்தாரா படம் தயாரிக்க விரும்புகிறார். அதிலும் நீங்கள் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.1 கோடி

சார், உங்களுக்கு நாள் கணக்குப்படி சம்பளம் அளிக்க, அதுவும் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி கொடுக்க நயன்தாரா தயாராக உள்ளார். டேட்ஸ் கூடினாலும் சம்பளம் கொடுக்க ரெடி என்று விக்னேஷ் அஜீத்திடம் தெரிவித்துள்ளார்.

மவுனம்

விக்னேஷ் சிவனின் திட்டத்திற்கு அஜீத் இதுவரை பச்சைக்கொடி காட்டவில்லையாம். இந்நிலையில் நயன்தாராவோ தல தான் நடிக்கணும் என பிடிவாதமாக உள்ளாராம்.

 

 

English summary
Nayanthara reportedly wants to produce a film with Ajith Kumar as hero.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos