»   »  நயன்தாராதான் என் ரோல் மாடல்!- கீர்த்தி சுரேஷ்

நயன்தாராதான் என் ரோல் மாடல்!- கீர்த்தி சுரேஷ்

Subscribe to Oneindia Tamil

இந்த நடிகைகளிடம் பத்திரிகையாளர்கள் எடுக்கும் பேட்டிகளைக் கூர்ந்து கவனித்தால் அதற்கான கேள்விகளை எளிதில் பட்டியலிட்டுவிடலாம்.

திரும்ப திரும்ப ஒரே செட் கேள்விகள்தான் இருக்கும். அந்த வகையில் எல்லா ஹீரோயினிடமும் கேட்கப்படும் கேள்வி உங்க ரோல் மாடல் யாரு?

கண்டிப்பாக அன்னை தெரசா என்றோ அன்னி பெசண்ட் என்றோ பதில் வராது என்ற நம்பிக்கையில் இந்த கேள்வி கேட்கப்படும். நடிகையும் இப்போது ஃபீல்டில் இல்லாத ஒரு சீனியர் நடிகையையோ, அல்லது பாலிவுட் பக்கம் போன நடிகையோ சொல்வார்கள்.

Nayanthara is my role model, says Keerthi Suresh

ஆனால் இந்த விஷயத்தில் கீர்த்தி சுரேஷ் பலே கில்லாடி.

சமீபத்தில் அப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு, "எனக்கு ரோல் மாடல் நயன்தாராதான். ஹிந்தியில எத்தனையோ ஆஃபர் வந்தாலும் அந்த பக்கம் ஒதுங்காம இங்கேயே இருக்காங்க. இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படக் கூடாதுங்கற அவங்க ஃபார்முலாவைத்தான் ஃபாலோ பண்றேன்,'' என்று நயனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

ஆக, நயனின் குட்புக்கில் சேர்ந்துவிட்டார் கீர்த்திசுரேஷ். அங்கிருந்தும் பலமான ரெகமெண்டேஷன்ஸ் வரும்!

English summary
Young actress Keerthi Suresh says that senior artist Nayanthara is her role model.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos