» 

முதல்ல தம்... இப்ப சரக்கு.. நீத்துவின் அபார முன்னேற்றம்!

Posted by:

ஆதி பகவனில் பாக்கெட் பாக்கெட்டாக தம்மடித்து, அந்த புகை மண்டலம் கலையும் முன்பாகவே அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார் நீத்து சந்திரா.

இப்போது புகையிலிருந்து சரக்குக்கு புரமோஷன் கொடுத்திருக்கிறார்களாம்.

யாவரும் நலம் படத்தில் அறிமுகமான நீத்து, அடுத்து 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தின் மூலம் பிரபலமானார். இதில் மிளகாய் தொட்டியில் இவர் போட்ட ஆட்டம் ரொம்ப பிரபலம்.

மிஸ்கின் இயக்கிய 'யுத்தம் செய்' படத்தில் 'கன்னித்தீவு பொண்ணா' என்ற குத்துப் பாடலுக்கு நடனமாடி கவர்ச்சி நாயகி என்ற கூடுதல் குவாலிபிகேஷனைப் பெற்றார்.

அமீரின் ஆதிபகவனில்...

கன்னித்தீவுப் பெண்ணா பாட்டுக்கு நீத்துவுடன் ஆட்டம் போட்டவர் இயக்குநர் அமீர். அப்போது நீத்துவின் அப்ரோச், வெளிப்படையான தன்மை ஆகியவற்றால் கவர்ந்து இழுக்கப்பட்ட அமீர், தனது அடுத்த படத்துக்கு அவரையே ஹீரோயினாக்கினார். அதுதான் ஆதி பகவன்.

தம்மரோ தம்...

ஆதி பகவனில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் அசத்தினார் என்றால், நீத்து சந்திராவும் வேறு ஒரு வகையில் மிரட்டினார்.

அவரது தோற்றம், அழகு குறித்து விதவிதமாக பலரும் விமர்சித்தாலும், நீத்து சந்திரா அந்தப் படத்தில் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் ஊதித் தள்ளியதைத்தான் பெரிதாகப் பேசுகிறார்கள்.

 

ஜெயம் ரவியை மிரள வைத்த சண்டை

ஆதி பகவனில் இன்னொரு ஸ்பெஷல் நீத்து சந்திரா போட்ட சண்டை. இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் இடம் பெறாத ஆக்ரோஷமான சண்டைக் காட்சி அது. டூப் போடாமல் தானே அந்த ஸ்டன்டை செய்தாராம் நீத்து.

புதிய வாய்ப்புகள்

ஆதி பகவன் படத்தின் வெற்றி தோல்வி ஒரு பக்கமிருந்தாலும், நீத்துவுக்கு புதுப் புது வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதாம். ஆனால் ஹீரோயினாக அல்ல. ஒரு பாட்டுக்கு கவர்ச்சிக் குத்தாட்டம் போட, ஒரு சண்டைக் காட்சியில் ஹீரோவுடன் மோத என வித்தியாசமான ஆஃபர்கள் வருகின்றனவாம்.

அடுத்து சரக்குதான்

அப்படி வந்த வாய்ப்புகளில் ஒன்று சேட்டை குத்தாட்டம். ஆர்யா - ஹன்சிகா - அஞ்சலி நடித்து வரும் இந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட வேண்டும் என அழைப்பு வந்ததாம். டாஸ்மாக் பாரில் நடனமாடுவதுபோல் படமாக்கப்படவிருக்கும் இப்பாடலுக்கு தண்ணி அடித்து, தள்ளாடியபடியே ஆடுகிறாராம்.

பிரேம்ஜி இருக்கும்போது பயிற்சி எதுக்கு?

நீத்து சந்திராவுடன் இந்தப் பாடலுக்கு ஆடப் போவது ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி ஆகிய மூவரும். இதற்காக நீது சந்திராவுக்கு தண்ணி அடித்து ஆடுவதுபோல் பயிற்சி கொடுக்க முடிவு செய்தார்களாம்.

ஆனால் உடன் ஆடப் போகிறவர் இந்த சமாச்சாரத்தில் எக்ஸ்பர்ட்டான பிரேம்ஜி என்பதால் பயிற்சியெல்லாம் வேண்டாம் என விட்டுவிட்டார்களாம்!!

 

Read more about: neethu chandra, settai, சேட்டை, நீத்து சந்திரா, குத்தாட்டம்
English summary
Actress Neethu Chandra is going to perform for a TASMAC song in Settai movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos