»   »  கணவரை பிரியவும் இல்லை, சேர்த்து வைக்கக் கோரவும் இல்லை: ரம்பா

கணவரை பிரியவும் இல்லை, சேர்த்து வைக்கக் கோரவும் இல்லை: ரம்பா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் தொழில் அதிபர் கணவரான இந்திரன் பத்மநாதனை நடிகை ரம்பா பிரிந்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. இதையடுத்து இந்திரனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி ரம்பா சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று கூறப்பட்டது.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் கணவருடன் சேர்ந்து வாழ அவர் ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

வதந்தி

என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என சகோதரர் மூலம் தற்போது தான் தகவல் கிடைத்தது. நான் விவாகரத்து கோரியிருந்தால் நீதிமன்றத்தில் அதற்கான பதிவு இருக்கும் அல்லவா?

நீதிமன்றம்

நான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்குமா இல்லையா? எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் மூத்த மகளை பள்ளியில் இரு்து அழைத்து வர கிளம்புகிறேன். என் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என ரம்பா தெரிவித்துள்ளார்.

ரம்பா

ரம்பா தனது கணவரை பிரிந்துவிட்டார் என்று முன்பும் கூட வதந்தி காட்டுத்தீயாக பரவியது. இது குறித்து அறிந்த ரம்பா அதிர்ச்சி அடைந்தார் தனது திருமண வாழ்வு நல்லபடியாக உள்ளதாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

ரம்பாவுக்கும், இந்திரன் பத்மநாதனுக்கும் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவர் கணவருடன் கனடாவில் செட்டிலாகிவிட்டார்.

English summary
Actress Rambha has said that all is well between her and businessman husband Indran Padmanathan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos