»   »  நிர்வாண காட்சிகளில் நடிக்க அச்சமோ, தயக்கமோ இல்லை: ராதிகா ஆப்தே

நிர்வாண காட்சிகளில் நடிக்க அச்சமோ, தயக்கமோ இல்லை: ராதிகா ஆப்தே

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படங்களில் நிர்வாணமாக நடிப்பதில் தயக்கம் இல்லை, என் உடலை பார்த்து வெட்கப்படவில்லை என்று பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்துள்ள பார்ச்ட் படம் வரும் 23ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

இந்த படத்தில் ராதிகா, ஹுசைன் வரும் நிர்வாண படுக்கையறை காட்சிகள் கடந்த மாதம் இணையதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.

அச்சம்

படங்களில் நிர்வாண காட்சிகளில் நடிக்க அச்சம் இல்லை. நான் உலக சினிமாவை பார்த்து வளர்ந்தவள். நான் நிறைய பயணம் செய்துள்ளேன் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பார்த்துள்ளேன்

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கலைஞர்கள் மேடையில் நிர்வாணமாக நடித்ததை நான் பார்த்துள்ளேன். என் உடலை நினைத்து நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என தெரியவில்லை என்று சொல்கிறார் ராதிகா.

உடல்

ஒரு நடிகையாக நடிக்க நான் உடலை பயன்படுத்துகிறேன். நிர்வாண காட்சிகளில் நடிக்க தயங்கவில்லை. நான் பாதுகாப்பான இடத்தில் இருந்து நடித்தேன் என்பது எனக்கு தெரியும் என்று ராதிகா கூறியுள்ளார்.

நிர்வாண காட்சிகள்

நிர்வாண காட்சிகள் கசிந்ததில் எனக்கு கவலை இல்லை. நான் என் வேலையை செய்கிறேன். என் படம் ரிலீஸாக காத்திருக்கிறேன். இந்நிலையில் வேறு எதையும் நினைத்து எனக்கு கவலை இல்லை என்கிறார் ராதிகா.

English summary
Actress Radhika apte said that she is proud of her body and has no apprehensions in doing bold scenes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos