»   »  அடித்து நொறுக்கும் சண்டையும், அமுக்கிப் பிடிக்கும் மசாஜும்.. புதுப் பரிமாணத்தில் பூனம் பாண்டே!

அடித்து நொறுக்கும் சண்டையும், அமுக்கிப் பிடிக்கும் மசாஜும்.. புதுப் பரிமாணத்தில் பூனம் பாண்டே!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பூனம் பாண்டே நடிக்கிறார் என்றாலே அது ஆச்சரியமான விஷயம்தான். காரணம், கவர்ச்சிக்கு மட்டுமே பெயர் போனவர் பூனம். ஆனால் அவரை வித்தியாசமான பரிமாணத்தில் காட்டப் போகிறாராம் இயக்குநர் வீரு.

தெலுங்கில் மாலினி அன் கோ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் பூனம்தான் நாயகி. அதுவும் சாதா நாயகி அல்ல, ஆக்ஷன் கலந்த அதிரடி நாயகி வேடமாம்.

அதேசமயம், பூனம் பாண்டேவன் பிரதானமான பலமான கவர்ச்சியை இதில் முக்கியமாக பயன்படுத்தியுள்ளனராம். நடிப்பு, ஆக்ஷன் மற்றும் கவர்ச்சி என்று வித்தியசமான கலவையில் உருவாகிறது இந்த மாலினி அன் கோ. கூடவே் இதை தமிழில் மைதிலி அன் கோ என்ற பெயரிலும் டப் செய்கிறார்கள்.

முதல் முறையாக

பூனம் பாண்டே தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகமானது இதுவே முதல் முறையாகும்.

மசாஜ் நாயகி

படத்தில் மசாஜ் செய்யும் அழகி வேடத்தில் வருகிறாராம் பூனம் பாண்டே. இந்த ரோல் தனக்கு மிகவும் பிடித்துப் போனதால்தான் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

மசாஜ் மட்டுமல்ல.. மல்லுக்கட்டும் உண்டு பாஸ்!

இதுகுறித்து பூனம் கூறுகையில், இந்தப் படத்தில் நான் மசாஜ் செய்யும் பெண் வேடத்தில் வருகிறேன். இப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஷூட்டிங் சிறப்பாக இருந்தது. மசாஜ் செய்பவராக மட்டுமல்ல, சண்டைக் காட்சிகளிலும் நான் நடித்துள்ளேன்.

எல்லோருக்கும் நெத்தியடி பதில்

என்னை வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே நினைத்துக் கொண்டிருப்போருக்கு இந்தப் படம் நல்ல பதிலாக அமையும். எனது ரோல் அப்படி.

பிரமிக்க வைப்பேன்

எனது கவர்ச்சியை மட்டுமே பார்த்து ரசித்தவர்களுக்கு நான் இப்படத்தில் போட்டிருக்கும் சண்டைக் காட்சிகள் பிரமிப்பைக் கொடுக்கும். சர்வதேச தீவிரவாதமும் இந்தப் படத்தின் கதையின் பின்னணியாக சேர்க்கப்பட்டிருப்பது முக்கியமானது என்றார் பூனம்.

ஒரு வேளை விஜயகாந்த் படம் போல இருக்குமோ...!

சர்வதேச தீவிரவாதம் என்று பூனம் சொல்வதைப் பார்த்தால், விஜயகாந்த் பட டைப்பில் இருக்குமோ என்ற அச்சம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

மைதிலி என்னைக் காதலி என்று ரசிகர்கள் பாராட்டும் வகையில் படம் இருந்தால் சரித்தான்!

 

English summary
Controversial Bollywood siren Poonam Pandey has completed shooting for her Tollywood debut Malini & Co. The movie is also dubbed in Tamil as Mythili & co.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos