twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது சுத்தத்திற்கான நேரம்... மோடி அழைப்பை ஏற்றுக் கொண்டார் பிரியங்கா சோப்ரா

    |

    மும்பை: தூய்மையான இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா.

    டெல்லியில் இன்று தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். துவக்க விழாவின் போது பேசிய மோடி, இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற இந்தியாவின் ஒன்பது பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    Priyanka Chopra accepts PM's 'Clean India' invite

    அதில், மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோர் அடங்குவர். மேலும், இணையத்தில் பரபரப்பை உண்டாக்கிய ஐஸ் பக்கெட் சவாலைப் போன்று, தான் அழைப்பு விடுத்தவர்கள் தங்களது பணியை நிறைவு செய்தவுடன் மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுமாறு மோடி கேட்டுக் கொண்டார்.

    மேலும், மக்கள் தாங்கள் நகரைத் தூய்மைப் படுத்தும் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் மோடி அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த சவாலை பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்றுக் கொண்டுள்ளார்.

    சவாலை ஏற்கிறேன்...

    பிரதமரின் இந்த திட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் தாழ்மையுடன் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிஜியின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

    ரசிகர்களுக்கும் அழைப்பு...

    மேலும் பிரியங்கா சோப்ரா தனது ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது, ‘சுத்தமான இந்தியா திட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும், ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் ஒன்றும் நடக்காது. ஆனால் நாம் ஒன்றாக இணைந்து பணிசெய்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

    மாற்றத்தை விரும்புகிறேன்...

    நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானதாக இருக்க வேண்டும். நான் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறேன்.

    சுத்தம் செய்யும் நேரம்...

    நான் இந்தியாவை சுத்தப்படுத்த விரும்புகிறேன். இது சுத்தம் செய்யும் நேரம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Priyanka Chopra has accepted Prime Minister Narendra Modi's invite to clean public places as a part of his 'Swachh Bharat Mission'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X