»   »  கொன்ச்சம்.. கொன்ச்சம்... தமிழ் தெரியும்: புலி விழாவில் ஹன்சிகாவின் கொஞ்சல் பேச்சு

கொன்ச்சம்.. கொன்ச்சம்... தமிழ் தெரியும்: புலி விழாவில் ஹன்சிகாவின் கொஞ்சல் பேச்சு

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகா தமிழில் பேச முயற்சி செய்துள்ளார்.

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா புலி படம் மூலம் மீண்டும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ருதி ஹாஸனும் உள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.


Puli audio launch: Hansika tries to speak in Tamil

விழாவில் ஹன்சிகா பேசுகையில்,


அனைவருக்கும் வணக்கம். நான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். குஞ்சம் குஞ்சம் தமிழ் பேசுவேன். நான் வேலாயுதம் படத்தில் விஜய் சாருடன் ஜோடியாக நடித்தேன். அதன் பிறகு தற்போது நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த சிம்பு சாருக்கு நன்றி.


கேமராமேன் நட்டி சாருக்கு நன்றி. விஜய் சார் அப்போ இருந்து இப்போ.... நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஸ்ரீதேவி மேடமோடு நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.


தமிழில் பேசத் திணறினாலும் முயற்சி செய்தார் அவர். தமிழ் தெரிந்தாலும் கூட பலரும் ஆங்கிலத்தில் பேசுகையில் ஹன்சிகா தமிழில் பேச முயன்றுள்ளார்.

English summary
Hansika tried to speak in tamil at the audio launch of her upcoming movie with Vijay titled Puli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos