» 

திருமணம் முடிந்த கையோடு கோலிவுட் திரும்பும் ரீமா சென் - விஜய் படத்தில் நடிக்கிறார்!

Posted by:

கடந்த மாதம் டெல்லி தொழிலதிபரை ஆடம்பரமாக திருமணம் முடித்த ரீமா சென் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய செய்தி!

விசாரித்ததில் இது அதிகாரப்பூர்வமானதுதான் என உறுதியானது.

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் சொந்தப்பட நிறுவனமான கில்லி பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படமான சட்டம் ஒரு இருட்டறையில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

1981-ல் வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய அதே சட்டம் ஒரு இருட்டறைதான் இப்போது ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ரீமா சென் கூறுகையில், "இந்தப் படத்தின் இந்தி ரீமேக் அந்தா கானூனை நான் பார்த்திருக்கிறேன். அதில் ஹேமமாலினியின் பாத்திரம் ரொம்பப் பிடிக்கும். அந்த பாத்திரத்தைதான் இப்போது தமிழில் நான் செய்யப் போகிறேன் என்பதில் ரொம்ப மகிழ்ச்சி. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவேன். முன்பை விட இன்னும் வேகமான ரீமாவை படத்தில் காணலாம்," என்றார்.

Read more about: reem sen, kollywood, vijay, ரீமா சென், விஜய்
English summary
Reema Sen, who recently got married is now making a strong comeback with actor Vijay’s production concern Ghilli Films who are remaking SA Chandrasekhar’s classic 1981 hard hitting film, Sattam Oru Iruttarai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos