»   »  இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்…

இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்…

Posted by:
Subscribe to Oneindia Tamil

நடிகையாக இருந்து சின்னத்திரையில் நடித்து இயக்குநராக அவதாரம் எடுத்த ரேவதி நீண்ட இளைவெளிக்குப் பின்னர் தனது 5வது திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் அறிமுகமான ரேவதி, ரஜினிகாந்த், கமலஹாசன், கார்த்திக், பிரபு உட்பட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது பிற மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இயக்குநர் அவதாரம்

இவர் சில வருடங்களுக்கு முன் ‘மித்ரு மை ப்ரண்ட்' என்ற ஆங்கிலப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

பாலிவுட் படங்கள்

அப்படத்தின் வெற்றியையடுத்து ‘பிர் மிலிங்கே', ‘மும்பை கட்டிங்' என இரண்டு இந்தி படங்களை இயக்கினார். பின்னர் ‘கேரளா கபே' என்ற மலையாளப்படத்தையும் இயக்கிய ரேவதி, அப்படத்துக்குப் பின்னர் வேறு படங்கள் எதுவும் இயக்கவில்லை.

மலையாளப் படங்களில்

சென்னையிலிருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த ரேவதி தமிழ்ப்படங்களை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக எந்தப்படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் ரேவதி.

ரேவதியின் 5வது படம்

இதற்கிடையில் தனது ஐந்தாவது படத்தை விரைவில் ரேவதி இயக்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது. சிறுகதை ஒன்றை தழுவி இந்தப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

English summary
Actress-filmmaker Revathi, who last went behind the camera in 2010 with the short story “Parcel” in the anthology “Mumbai Cutting”, says she will return to directing movies in the next two years
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos