»   »  "சாப்டர்" முடிஞ்சு போச்சு.. சமந்தா பரபரப்பு பேட்டி!

"சாப்டர்" முடிஞ்சு போச்சு.. சமந்தா பரபரப்பு பேட்டி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சமந்தாவின் கைவசம் இப்போது 6 படங்கள் இருக்கிறதாம். இதனால் 2015ஆம் ஆண்டு தன்னுடைய ஆண்டு என்று சந்தோசப்படுகிறார் சமந்தா.

சமந்தா நடித்து வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.

தெலுங்கில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்கில் நடித்தவருக்கு அதன் பின் அங்கு வெளிவந்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார்.

நான் ஈ மூலம் வெளிச்சம்

நான் ஈ படம் மூலம் தமிழில் அறியப்பட்ட நடிகையாக மாறினார் சமந்தா. இதனையடுத்து தமிழில் அஞ்சான், கத்தி என வரிசையாக பெரிய ஹீரோக்களுடன் படங்கள் புக் ஆனது.

கத்தி பட வெற்றி

அஞ்சான் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதில் அப்செட் ஆகியிருந்த சமந்தாவிற்கு ‘கத்தி' படம் தமிழில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

விக்ரம் படத்தில்

தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சமந்தாவிற்கு ‘கத்தி' படத்தின் வெற்றி மாற்றி விட்டது. தற்போது விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.

6 படங்கள் கைவசம்

அடுத்து தனுஷுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த ஆண்டு தமிழில் 3 படங்களிலும், தெலுங்கில் 3 படங்களிலும் நடிக்கப் போகிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்தபோது அவர் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அஜீத் படத்தில்

மேலும் அவருடைய திருமணத்தைப் பற்றி ஒரு ரசிகர் கேட்ட போது அந்த ‘சாப்டர் முடிவுக்கு வந்துவிட்டது," என்று கூறியிருக்கிறார். சமந்தா தொடர்ந்து தமிழில் அதிக கவனம் செலுத்தப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.

அதுதான் இதுவா?

அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஆர்வமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தா சொல்லியுள்ள 3 படங்களில் இந்த படமும் ஒன்றா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

English summary
Recently rumours cam out that Samantha and Siddharth eneded their releationship and then Samantha came out on this on her micro blogging site and cleared everything, saying that the fault is not with her. Samantha has six films in her hand now. She said: “ I’m doing three Telugu and Three Tamil movies this year and I promise strong roles in all my films
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos