»   »  இன்னா மாமே.. எப்படிக் கீற... சொந்தக்குரலில்... ‘வடசென்னை’ சேரிப் பெண்ணாக சமந்தா!

இன்னா மாமே.. எப்படிக் கீற... சொந்தக்குரலில்... ‘வடசென்னை’ சேரிப் பெண்ணாக சமந்தா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ்-வெற்றிமாறன் மீண்டும் இணையும் வடசென்னை படத்தில் குடிசைவாழ் பெண்ணாக நடிக்க உள்ளாராம் சமந்தா.

தமிழில் இதுவரை சொல்லிக் கொள்வது போல் வெற்றிப் படங்கள் எதுவும் தரவில்லை என்ற போதும், தொடர்ந்து முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார் சமந்தா. அவரது படங்களில் நடிப்புத் திறமையை விட, கவர்ச்சியே தூக்கலாக இருக்கும்.


மாடர்ன் உடையணிந்து, பக்கா மேக்கப்பில் அழகு தேவதையாக வலம் வருவார் சமந்தா. ஆனால், முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு, மேக்கப் இல்லாமல் கிளாமர் இல்லாமல் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.


வடசென்னை...

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்தின் மூலம் இணைய உள்ளனர். இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார்.


இரண்டு பாகங்களாக...

வடசென்னை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் தனுஷை நாயகனாக்கினார் வெற்றிமாறன்.


புதிய கதாபாத்திரம்...

இந்தப் படத்தில் தனுஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் கதாபாத்திரத்தின் 30 ஆண்டுகள் வளர்ச்சியை காட்சிப்படுத்த இருக்கிறார்களாம்.


குடிசைவாழ் பெண்ணாக...

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா குடிசைவாழ் பெண்ணாக நடிக்க இருக்கிறாராம். இதற்காக அதிக மேக்கப் இல்லாமல், கருமையான தோற்றத்தில் அவர் தோன்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சொந்தக் குரலில்...

மேலும், இப்படத்தில் அவர் சொந்தக்குரலில் பேசி நடிக்க இருக்கிறாராம். சமந்தா சென்னைப் பெண் என்பதால் தான் அவரை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்களாம்.


தங்கமகன்...

ஏற்கனவே, தனுஷுடன் தங்கமகன் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார் சமந்தா. இப்படம் வரும் கிறிஸ்துமஸுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2016ல் ஷுட்டிங்...

அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படத்திற்கென 200 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார் தனுஷ்.


துரை.செந்தில்குமார் இயக்கத்தில்...

'வட சென்னை' படத்துக்கு முன்னதாக, துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.


English summary
Actress Samantha Ruth Prabhu, known mostly for essaying stylish roles onscreen, will be seen in a non-glamorous avatar for filmmaker Vetrimaaran's next Tamil directorial Vada Chennai, a two-part film featuring Dhanush in the lead role.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos