»   »  தெறி ஆடியோ விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் - சமந்தா

தெறி ஆடியோ விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் - சமந்தா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடுமையான காய்ச்சல் காரணமாக தன்னால் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று சமந்தா கூறியிருக்கிறார்.

Samantha not attend Theri Audio Function

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறும் இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்தது கொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் நாயகி சமந்தா "தெறி பாடல்களுக்கு நீங்கள் கொடுத்து வரும் பேராதரவு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஆனால் கடுமையான காய்ச்சல் காரணமாக என்னால் தெறி ஆடியோ விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

சமந்தாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

English summary
Samantha Tweeted "Your reaction to the songs made a very sick girl really happy ❤️. Fever,flu with some exhaustion on the side . Will miss you #TheriAudio".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos