»   »  அம்மாவை விட்டு என்னை அறையச் சொன்னார்: கணவர் மீது நடிகை கரிஷ்மா புகார்

அம்மாவை விட்டு என்னை அறையச் சொன்னார்: கணவர் மீது நடிகை கரிஷ்மா புகார்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது கணவர் தன்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் என்பதை பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சய் கபூரை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் பிரிந்து வாழ்வதுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இந்நிலையில் சஞ்சய் தன்னை கொடுமைப்படுத்தியதாக கரிஷ்மா வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து கரிஷ்மா கூறுகையில்,

அறை

பிரசவத்திற்கு பிறகு சஞ்சயின் தாய் ஒரு உடையை கொடுத்து என்னை அணியுமாறு கூறினார். எனக்கு அந்த உடை சிறியதாக இருந்ததால் அணிய முடியவில்லை. இதை பார்த்த சஞ்சய் என்னை கன்னத்தில் அறையுமாறு அவரது தாயிடம் தெரிவித்தார். அவரது தாய் எப்பொழுதுமே சஞ்சய்க்கு தான் ஆதரவாக இருந்தார்.

மகன்

நானும், என் கணவரும் இங்கிலாந்து செல்ல வேண்டியிருந்த நிலையில் எங்கள் மகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆனால் சஞ்சய் எங்கள் மகனை விட்டுவிட்டு இளவரசர் வில்லியமுடன் போலோ விளையாட இங்கிலாந்து செல்ல முடிவெடுத்தார்.

என் அம்மா

திருமணத்திற்கு முன்பே சஞ்சயின் தந்தை என் அம்மாவை அழ வைத்தார். திருமணத்திற்கு முன்பே இப்படி செய்பவர்கள் தாலி கட்டிய பிறகு என்னவெல்லாம் செய்வார்கள்

என்று பயந்து திருமணத்தை நிறுத்த முடிவு செய்தேன். ஆனால் சஞ்சய் என்னை பேசியே சம்மதிக்க வைத்துவிட்டார்.

 

 

தேனிலவு

தேனிலவுக்கு கிளம்பும் முன்பு சஞ்சய் எனக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்று கணக்கு போட்டார். நான் பிரபலமான நடிகை என்ற ஒரே காரணத்திற்காக அவர் என்னை திருமணம் செய்து கொண்டார்.

பிரபலம்

சஞ்சய்க்கு பிரபலமாக இருக்க ஆசை. ஆனால் அவர் பிரபலமாகும்படி எதையும் செய்யவில்லை. இதையடுத்து தான் என்னை திருமணம் செய்து ஊர், உலகம் எல்லாம் பிரபலம் ஆனார் என்றார் கரிஷ்மா.

 

 

சஞ்சய்

கரிஷ்மா தன்னுடைய பணத்திற்காகவே தன்னை திருமணம் செய்ததாக சஞ்சய் கபூர் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karisma Kapoor has filed a domestic violence plea against Sanjay Kapur and mentioned many incidents from her personal life. The actress revealed that once Sanjay told his mother to slap her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos