»   »  விஜய்யை பார்த்தாவே எனக்கு கை, கால் உதறுது: கீர்த்தி சுரேஷ்

விஜய்யை பார்த்தாவே எனக்கு கை, கால் உதறுது: கீர்த்தி சுரேஷ்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை பார்த்தாலே கை, கால் உதறுவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் சேர்ந்து பைரவா படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. கீர்த்தி விஜய்யுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.


இந்நிலையில் பிரபல இணையதளத்திற்கு கீர்த்தி அளித்த பேட்டியில் கூறுகையில்,


விஜய்

நான் விஜய்யை சின்னதில் இருந்தே திரையில் பார்த்து வளர்ந்துள்ளேன். அதனால் விஜய்யின் ஹீரோயின் என்று என்னை நினைக்க முடியவில்லை.


போக்கிரி

போக்கிரி சக்சஸ் மீட்டிற்காக விஜய் திருவனந்தபுரம் வந்திருந்தபோது என் வீட்டிற்கு அருகில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரை பார்த்து ரசிகர்கள் கையசைத்தபோது நானும் என் வீட்டு பால்கனியில் இருந்து கை காட்டியுள்ளேன்.


சிறந்த மனிதர்

விஜய் சார் ஒரு அருமையான மனிதர். அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். பைரவா படத்தில் ஒரு பாடலை காட்சியாக்கி வருகிறோம்.


பயம்

பாடல் காட்சியால் தான் பயமாக உள்ளது. சார் கூட நின்று டான்ஸ் ஆட வேண்டும். எனக்கு கை, கால் எல்லாம் உதறுது. விஜய்க்கு ஈடாக ஆடிவிட வேண்டும் என்ற ஒரு பயம்.


English summary
Keerthy Suresh said that she is scared to dance with Vijay as he is known for his dancing skill.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos