twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட்வான்ஸே தரவில்லை.. தயாரிப்பு நிறுவனம் மீது ஸ்ருதி ஹாஸன் வழக்கு‍

    By Shankar
    |

    ஹைதராபாத்: படத்தில் நடிக்க தனக்கு அட்வான்சும் தரவில்லை, தனக்கு தெரியாமலேயே தமன்னாவை நாயகியாகவும் ஒப்பந்தம் செய்து ஏமாற்றிவிட்டார்கள், என்று பிவிபி நிறுவனம் மீது நடிகை ஸ்ருதிஹாஸன் பதில் வழக்குப் போட்டுள்ளார்.

    தமிழ், தெலுங்கில் தயாராகும் படமொன்றில் கார்த்தி, நாகார்ஜூனா நாயகர்களாக நடிக்கின்றனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

    Shruthi Hassan files case against PVP

    படப்பிடிப்பு துவங்கும் போது திடீரென அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகக் கூறி, படத்தைத் தயாரித்த பிவிபி சினிமா நிறுவனம் சுருதி மீது ஹைதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புது படங்களில் ஸ்ருதி ஹாசன், நடிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதனை எதிர்த்து ஸ்ருதிஹாசன் ஹைதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தது உண்மைதான். ஆனால் அதற்காக நான் முன் பணம் எதுவும் வாங்கவில்லை. கால்ஷீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் 2-ந்தேதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்று மார்ச் 17-ந்தேதிதான் எனக்கு தெரிவித்தனர். அந்த நேரத்தில் நான் புலி படத்தில் நடித்து கொண்டிருந்தேன்.

    எனவேதான் அந்த தேதிகளில் வர இயலாது என்று கூறினேன். அதன் பிறகு பட நிறுவனத்தினர் புலி படத்தின் தயாரிப்பாளர்களிடமும் பேசினார்கள். ஆனாலும் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. எனவேதான் அந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவித்தேன். கோர்ட்டில் எனக்கு எதிராக பட நிறுவனத்தினர் வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவிடம் பேசி படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டனர்.

    இந்த விஷயத்தை நீதிமன்றத்தின் கவனத்தக்குக் கொண்டு வராமல் மறைத்து விட்டார்கள். புது படங்களில் நான் நடிப்பதற்கு தடை உத்தரவும் பெற்று விட்டனர். அட்வான்ஸ் தராமலும் தமன்னாவை தேர்வு செய்தும் ஒப்பந்தத்தை மீறியது அவர்கள்தான். எனவே புது படங்களில் நான் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த வழக்கு விசாரணையை நீதிபதி நாளை மறுநாள் 20 -ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    English summary
    Actress Shruthi Hassan has filed a case against PVP cinemas that the later had cheated her by not giving advance amount and also misleading the court by signed Tamanna before filing the case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X