»   »  அஜீத்துக்காக கார்த்தியை கழற்றிவிட்ட ஸ்ருதி ஹாஸன்?

அஜீத்துக்காக கார்த்தியை கழற்றிவிட்ட ஸ்ருதி ஹாஸன்?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ருதி ஹாஸன் அஜீத் படத்தில் நடிப்பதற்காக கார்த்தி, நாகர்ஜுனா நடிக்கும் படத்தில் இருந்து விலகியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் வம்சி நாகர்ஜுனா, கார்த்தியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படம் எடுக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஸ்ருதிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளதால் அவரை தேர்வு செய்தார்கள்.

இந்நிலையில் தான் ஸ்ருதி வம்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

ஸ்ருதி

தான் மிகவும் பிசியாக இருப்பதாகக் கூறி கார்த்தி படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

4 படங்கள்

ஸ்ருதி தற்போது விஜய், மகேஷ் பாபு படங்கள் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். அதனால் டேட்ஸை அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லை. எனவே அவர் கார்த்தி படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

அஜீத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் ஹீரோயினாக ஸ்ருதி அண்மையில் ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தில் நடிக்கவே ஸ்ருதி கார்த்தி படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

ரமணா ரீமேக்

ரமணா படத்தின் இந்தி ரீமேக்கான கப்பார் இஸ் பேக் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தற்போது ஸ்ருதி பிசியாக உள்ளார்.

English summary
Shruti Haasan has opted out of Karthi's movie to be directed by Vamsi Paidipally. Buzz is that she has taken this decision to act in Ajith's upcoming movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos