»   »  ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்டி என் கடந்த காலத்தை அழிக்கச் சொல்ல முடியாது! - சன்னி லியோன்

ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்டி என் கடந்த காலத்தை அழிக்கச் சொல்ல முடியாது! - சன்னி லியோன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த காலத்தில் ஆபாச நடிகையாக இருந்ததற்காக நான் வருத்தப்படவில்லை. அதற்காக ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்டி என் கடந்த காலத்தை அழித்துவிடுமாறு கேட்க முடியாது.. என்று கூறியுள்ளார் சன்னி லியோன்.

முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோனுக்கு இந்தியில் நல்ல மார்க்கெட் இருந்தாலும், முன்னணி நடிகர்கள் யாரும் தன்னுடன் நடிக்கவில்லையே என்ற வருத்தம் அதிகமாகிவிட்டது.

அடிக்கடி அதுபற்றி வெளிப்படையாகக் கூறி வருகிறார்.

ஏக் பஹேலி லீலா

சன்னி லியோன் நடிப்பில் இந்திப்படம் 'ஏக் பஹேலி லீலா' டிரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. 'ஏக் பஹேலி லீலா'ஏப்ரல் 10 ந்தேதி வெளிகிறது. இந்த படத்தை பாபி கான் இயக்கி உள்ளார் இது ஒரு மறுபிறவி குறித்த படம் ஆகும் இசை மற்றும் திர்ல்லர் படமாக இது உருவாகி உள்ளது. ஜெய் மனுஷாலி, ராஜ்னேஷ் டக்கல் மற்றும் மோகித் அக்லாவாத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ரஜினி ரசிகையாக

இத படத்தில் கதைப்படி சன்னி லியோன் ரஜினியின் தீவிர ரசிகர். சூப்பர் ஸ்டார் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் காட்சியில் ரஜினி மாதிரி ஸ்டைலாக கண்ணாடியை மாட்டும் காட்சியில் நடித்துள்ளாராம். இதற்காக அவர் 30 நிமிடம் பயிற்சி எடுத்தாராம்.

நான் அப்படித்தான்

தன்னுடன் பெரிய ஹீரோக்கள் நடிக்க மறுப்பது குறித்து சன்னி லியோன் கூறுகையில், "அவர்கள் என்னுடன் ஏன் நடிக்க மறுக்கிறார்கள் என்றே புரியவில்லை. என் கடந்த காலம்தான் பிரச்சினை என்றால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அதுபற்றி எனக்கு வருத்தமே இல்லை.

 

 

வீட்டுக் கதவைத் தட்டி

இதற்கு முன் அப்படி இருந்தேன்... இப்போது அப்படி இல்லை என்று யாருக்கும் விளக்கம் தர விரும்பவில்லை. ஒவ்வொருவரின் வீட்டுக் கதவையும் தட்டி எனது கடந்த காலத்தை அழித்து விடுங்கள் என்று கூற முடியாது.அதற்காக நான் மன்னிப்பு கேட்கும் நிலையில் இல்லை," என்றார்.

English summary
Sunny Leone has accepted her past and taken it in her stride, was reportedly disappointed when these A-list stars turned down the role.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos