»   »  பப்ளிசிட்டிக்காக இந்த டாப்ஸி செய்த வேலையை பாருங்களேன்!

பப்ளிசிட்டிக்காக இந்த டாப்ஸி செய்த வேலையை பாருங்களேன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது படத்தை விளம்பரப்படுத்த நடிகை டாப்ஸி அழையா விருந்தாளியாக ஒரு திருமணத்திற்கு சென்று அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

டாப்ஸி ரன்னிங்ஷாதி.காம் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எப்படி விளம்பரப்படுத்தலாம் என்று யோசித்தவருக்கு திடீர் என ஒரு ஐடியா கிடைத்தது.

Taapsee Pannu Gatecrashes A Wedding

திருமணம் பற்றிய படம் என்பதால் திருமண நிகழ்ச்சிக்கு செல்லலாம் என அவர் முடிவு செய்தார்.

மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமண கொண்டாட்டத்தின் ஒன்றான சங்கீத் நிகழ்ச்சியில் டாப்ஸி அழையாக விருந்தாளியாக கலந்து கொண்டார்.

குஜராத்தி திருமணத்தில் அவர் தனது படத்தில் வரும் பஞ்சாபி பாடலான டிம்பி தீ நாலுக்கு டான்ஸ் ஆடினார். இதை பார்த்து அங்கிருந்தவர்களும் டாப்ஸியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள்.

அழையா விருந்தாளியாக ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றது த்ரில்லாகவும், படப்படப்பாகவும் இருந்ததாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Taapsee Pannu gatecrashed a real life pre-wedding celebration to promote her upcoming film "Runningshaadi.com". She says she was very thrilled and nervous to do it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos