»   »  கச்சிதக் காக்கியைக் குறி வைத்து "கிக்"கோடு திரியும் நாயகிகள்!

கச்சிதக் காக்கியைக் குறி வைத்து "கிக்"கோடு திரியும் நாயகிகள்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய நடிகைகளில் போலீஸ் உடையின் மீது தீராத காதல், கொண்டவராக பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை விஜயசாந்தி. விஜயசாந்திக்குப் பின்னர் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த நடிகையும் போலீஸ் உடை அணிந்து நடித்ததில்லை.

குஷ்பூ, கவுதமி போன்ற நடிகைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில படங்களில் காவல் உடை அணிந்து நடித்திருக்கின்றனர்.தற்போதுள்ள நடிகைகளில் சினேகா, அனுயா, அமலா பால் போன்ற ஒருசில நடிகைகள் போலீஸ் உடையில் நடித்திருக்கின்றனர்.

ஆனால் விஜயசாந்தி அளவுக்கு எந்த ஒரு நடிகையும் காவல் உடையில் ஜொலித்ததில்லை, நிலைமை இப்படி இருக்க தற்போதைய கோடம்பாக்கத்தின் ட்ரெண்டாக காக்கிச்சட்டை மாறிவருகிறது.

முன்னணி நடிகைகள் பலரும் காக்கி உடையைக் காதலிக்க ஆரம்பித்து இருக்கின்றனர், எந்தெந்தப் படங்களில் யாரெல்லாம் காக்கி உடை அணிந்து நடிக்கின்றனர் என்று பார்க்கலாம்.

பிள்ளையார் சுழி காஜல் அகர்வால்

ஜில்லா படத்தில் முதன்முதலில் காக்கி உடை அணிந்து இந்த ட்ரெண்டை உருவாக்கி வைத்தவர் காஜல் அகர்வால் தான், அம்மணி காட்டிய வழியில் அடுத்தடுத்த நடிகைகளும் படு ஜோராகப் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

 

 

தூங்காவனத்தில் த்ரிஷா

கமலுடன் இணைந்து தூங்கா வனத்தில் நடிக்கும் த்ரிஷா, இந்தப் படத்தில் காக்கி உடை அணிந்து கம்பீரமாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

தனி ஒருவனில் நயன்தாரா

நயன்தாரா மட்டும் சும்மா இருப்பாரா தனி ஒருவனில் காக்கி உடை அணிந்து போலீசாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கான் படத்தில் டாப்ஸி

சிம்புவுடன் கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் டாப்ஸி பன்னு, இந்தப் படத்தில் லேடி போலீசாக நடித்துக் கொண்டிருக்கிறார்.போலீசாக நடித்து காமெடி செய்கிறார்களா இல்லை கடமையைச் செய்கிறார்களா என்று பார்க்கலாம்.

English summary
Tamil Film Industry The Following Top Heroines Trisha, Nayanthara and Tapsee, Now Turned In Police Getup’s.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos