»   »  தென்னிந்தியாவில் இன்னும் நம்பர் 1... நயன்தாராதான்!

தென்னிந்தியாவில் இன்னும் நம்பர் 1... நயன்தாராதான்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2014 & 2015 ம் ஆண்டில் பிரபல நிறுவனம் ஒன்று எடுத்த சர்வே முடிவுகளில் தென்னிந்தியாவிலேயே, மிக அதிகமாக சம்பாதிக்கும் 10 பணக்கார நடிகைகள் இவர்கள் தான் என்று கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டு இருக்கிறது.

நடித்த படங்கள், விளம்பரங்கள், மார்க்கெட் வேல்யூ ஆகியவற்றை கணக்கில் கொண்டு எடுத்திருக்கும் இந்த முடிவுகளில் ஒவ்வொருவரும் வாங்கும் சம்பளம், நடிக்கும் படங்கள் மற்றும் நடித்து சம்பாதித்த பணம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் அழகிகளைப் பற்றி ஒரு பார்வை இங்கே.

நம்பர் 1 நயன்தாரா

என்னதான் படங்கள் தோல்வி அடைந்தாலும் அம்மணியின் புகழோ, மதிப்போ சற்றும் குறையவில்லை. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளுத்துக் கட்டும் நயன்தாரா ஒரு படத்திற்கு 2 - 3 கோடிவரை வாங்குவதாக கேள்வி. அம்மணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா 10 மில்லியன் டாலர்களாம்.

அனுஷ்கா ஷெட்டி

அருந்ததி அனுஷ்காவிற்கு இந்தப் பட்டியலில் 2 ம் இடம் பணத்தில் முதலிடத்தில் இருக்கும் அனுஷ்கா புகழில் நயனை விட குறைந்து இருப்பதால் இந்தப் பட்டியலில் அனுஷுக்கு கிடைத்திருப்பது இரண்டாமிடம். ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்கும் அனுஷ்காவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 22 மில்லியன் டாலர்கள்.

தமன்னா

தனது வசீகர நடிப்பாலும் கிறங்கடிக்கும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா இந்தப் பட்டியலில் 3 மிடம் பிடித்திருக்கிறார். பாகுபலி வெற்றியால் மார்க்கெட் இன்னும் ஏறியிருக்கிறது ஒரு படத்திற்கு சுமார் 1.75 கோடி வாங்குகிறார் என்று கேள்வி, சொத்து மதிப்பு உறுதியாக தெரியவில்லை.

ஸ்ரேயா சரண்

தமிழில் உச்சத்தில் இருந்த ஸ்ரேயாவிற்கு கைவசம் தற்போது படங்கள் அதிகமாக இல்லை எனினும் அவரின் சொத்து மதிப்பு மற்றும் புகழ் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தப் பட்டியலில் அவருக்கு 4 மிடம். ஸ்ரேயாவின் சம்பளம் 1 கோடிக்கும் சற்று அதிகம் என்று கூறுகிறார்கள் சம்பளம் அந்தளவிற்கு இருக்கிறதோ இல்லையோ அம்மணிக்கு சொத்து இருக்கிறது, ஸ்ரேயாவின் சொத்து மதிப்பு 12.5 மில்லியன் டாலர்கள்.

காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் இனிப்பான நடிகை காஜலிற்கு இந்தப் பட்டியலில் 5 வது இடம். படங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் இந்த இடத்தை தக்க வைத்திருக்கும் காஜல், ஒரு படத்திற்கு 1 கோடிக்கும் சற்று அதிகமாக சம்பளம் வாங்குகிறார். சொத்து மதிப்பு உறுதியாக தெரியவில்லை.

த்ரிஷா

தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷா இந்தப் பட்டியலில் 6 வது இடத்தை தக்க வைத்துள்ளார், எவ்வளவு சர்ச்சைகள் வந்தபோதும் த்ரிஷாவின் புகழ் சற்றும் குறையவில்லை. படமொன்றிற்கு 80 லட்சம் முதல் 1 கோடிவரை சம்பளமாகப் பெறுகிறார். த்ரிஷாவின் சொத்து மதிப்பு தெரியவில்லை.

ஹன்சிகா மோத்வானி

தமிழ்நாட்டின் சின்ன குஷ்பூவிற்கு இந்தப் பட்டியலில் 7 வது இடம் ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும், தற்போது அம்மணி நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் படமொன்றிற்கு 70 லட்சம் வாங்குகிறார்.

சுருதிஹாசன்

ஹிந்தியில் ஹிட்டடித்தாலும் தென்னிந்திய மார்க்கெட்டில் மேலே சொன்ன நடிகைகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால் இந்தப் பட்டியலில் பல படிகள் கீழிறங்கி 8 வது இடத்தைப் பிடித்திருக்கிறார் சுருதிஹாசன்.படமொன்றிற்கு 70 முதல் 75 லட்சங்களை சம்பளமாக பெறுகிறார் சுருதி.

பிரியாமணி

ஆச்சரியமாக பருத்திவீரன் புகழ் பிரியாமணி இந்தப் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்திருக்கிறார், தமிழில் பெரிய அளவில் ஜொலிக்கா விட்டாலும் தெலுங்கு உலகம் மற்றும் விளம்பரங்கள் பிரியாமணியைக் கைவிடவில்லை. ஒரு படத்திற்கு 70 முதல் 75 லட்சங்களை சம்பளமாக பெறுகிறார்.

சமந்தா

சமத்து சமந்தா இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறார், முன்னணி நடிகையாக தற்போது தான் முன்னேறிக் கொண்டிருப்பதால் சம்பளம், புகழ் மற்றும் சொத்து மதிப்பு ஆகியவற்றில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறார் சமந்தா. படமொன்றிற்கு சம்பளமாக சுமார் 70 லட்சங்களைப் பெறுகிறார் சமந்தா.

மணி, மணி, மணி......

 

English summary
Top Tamil and Telugu Richest Actress list In 2014 and 2015.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos