»   »  வடிவேலுவின் எலி வலையில் விழுந்த நடிகை சதா...

வடிவேலுவின் எலி வலையில் விழுந்த நடிகை சதா...

Posted by:
Subscribe to Oneindia Tamil

எலி படத்தில் வடிவேலு உடன் நடிகை சதா டூயட் ஆடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயம் படத்தில் பாவாடை தாவணியில் கலக்கிய சதா தமிழக ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். கவர்ச்சி காட்டமாட்டேன் என்று பிகு செய்த சதா ஷங்கர் படத்தில் தாராளமாக நடித்தார்.


அதற்குப் பிறகு படங்கள் வரிசை கட்டும் என எதிர்பார்த்தார் சதா ஆனால் பிரியசகி, 'உன்னாலே உன்னாலே' என சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு வந்தது.


தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் அவர் ‘மார்க்கெட்' இழந்து விட்டார். வீட்டில் சும்மா இருப்பதை விட, ஒரு பாடலுக்கு ஆடுவது மேல் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.


வடிவேலு உடன் டூயட்

சதா தற்போது ‘எலி' படத்தில் வடிவேலுடன் டூயட் ஆடியிருக்கிறாம். ஹீரோயின் என்று ஒரு சாரார் கூறினாலும் ஒரு பாடலுக்கு டூயட் என்று சிலர் கூறி வருகின்றனர்.


வடிவேலு ஹீரோ

வடிவேலு நாயகனாக நடித்த 'தெனாலிராமன்' படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன், 'எலி' படத்தையும் இயக்குகிறார். ஒரு எலியின் குணாதிசயங்களைக் கொண்டவராக வடிவேலு இதில் நடிக்கிறார். 70-களில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.


ஸ்ரோயாவிற்குப் பின் சதா

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் வடிவேலுடன் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுபோல், ‘எலி' படத்திலும் ஒரு பிரபல கதாநாயகியை நடிக்க வைக்க முயற்சி நடந்தது.


எலியில் சதா

வடிவேலு உடன் வேறு எந்த பிரபல நடிகையும் ஆட சம்மதம் தெரிவிக்காத நிலையில் சதா டூயட் ஆடியுள்ளாராம். இது குறித்து கருத்து கூறியுள்ள இயக்குநர் யுவராஜ், எலி படத்தில் சதா ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார் மேற்கொண்ட வேறு எதுவும் இப்போதைக்குக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.


விரைவில் ரிலீஸ்

படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து வெளியாகத் தயாராகிவிடும் என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.


ஒரு வெற்றி இரண்டு தோல்விகள்

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்தப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' என்ற படத்திலும் அவர் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


வடிவேலு சம்பளம்

மூன்றாண்டுகள் வீட்டில் முடங்கியிருந்தாலும் தொடர்ந்து கதாநாயகன் வேடத்தில் நடிப்பதிலேயே குறியாக இருந்தார் வடிவேல். அவர் ஹீரோவாக நடித்த தெனாலிராமன் படம் படுதோல்வியடைந்தது. அந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ.3.5 கோடி சம்பளம் வாங்கினாராம்.


டபுள் மடங்கு

எலி படம் ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாராகிறதாம். இதில் வடிவேலு சம்பளம் ரூ.7 கோடி என்று பேச்சு அடிபடுகிறது. வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சனையில்லாமல் நடித்து எலியை வெற்றிபெற வைப்பாரா வடிவேலு பொருத்திருந்து பார்க்கலாம்.


English summary
Actress Sadha, who was last seen in 2011 Tamil film 'Puli Vesham', is making a comeback of sorts to the industry with upcoming Tamil comedy 'Eli', starring comedian Vadivelu in the lead.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos