»   »  சினேகாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?: 'அவங்க 2' பேரும் இல்லையாம்

சினேகாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?: 'அவங்க 2' பேரும் இல்லையாம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினேகாவுக்கு தற்போதுள்ள ஹீரோக்களில் மிகவும் பிடித்தவர் விஜய் சேதுபதியாம்.

அஜீத், விஜய், கமல் ஹாஸன், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

தற்போது அவருடை மகன் விஹானுக்கு ஒரு வயதாகிவிட்டது.

விளம்பர படங்கள்

குழந்தை பிறந்த பிறகு நடிக்காமல் இருந்த சினேகா தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மோகன்ராஜா

நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடித்த சினேகா மோகன்ராஜா சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கும் படத்தில் ஹீரோயின் அல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதி

சினேகா தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக உள்ளார். தற்போது உள்ள ஹீரோக்களில் உங்களுக்கு பிடித்தவர் யார் என்று சினேகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய் சேதுபதி தான் என்றார்.

இயல்பு

விஜய் சேதுபதியின் கதாபாத்திரமாகட்டும், வசன உச்சரிப்பாகட்டும் ஹீரோயிசம் இல்லாமல் இயல்பாக உள்ளது எனக்கு பிடித்துள்ளது. நான் இதை அவரிடமே நேரில் கூறியுள்ளேன் என்றார் சினேகா.

English summary
Sneha said that she likes Vijay Sethupath the most among the current heroes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos