»   »  நான் ஏன் வருண் மணியனுடனான திருமணத்தை நிறுத்தினேன்?: த்ரிஷா

நான் ஏன் வருண் மணியனுடனான திருமணத்தை நிறுத்தினேன்?: த்ரிஷா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருண் மணியனுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார் த்ரிஷா.

த்ரிஷா 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த கொடி படம் ஹிட்டாகியுள்ளது. கொடியில் த்ரிஷாவுக்கு மரத்தை சுற்றி பாட்டு பாடம் கதாபாத்திரம் இல்லை.

மாறாக வலுவான கதாபாத்திரம் ஆகும். இந்நிலையில் த்ரிஷா திருமணத்தை நிறுத்தியது பற்றி கூறுகையில்,

கொடி

கொடி படம் வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த தருணத்திற்காக தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்தேன்.

சினிமா

வெற்றியோ, தோல்வியோ தொடர்ந்து படங்களில் நடிப்பதே என் திட்டம். நான் திருமணம் செய்வதாக இருந்த நபர் திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்றார்.

திருமணம்

எனக்கு மிகவும் பிடித்த சினிமாவை அவர் வேண்டாம் என்றார். நடிப்பை நிறுத்திக் கொள்வதற்கு பதில் திருமணத்தை நிறுத்திவிட்டேன். நான் கர்ப்பமடைந்தால் மட்டுமே சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பேன்.

கர்ப்பம்

ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றால் என் இமேஜுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேனே தவிர சினிமாவை விட்டு போக மாட்டேன். என் கடைசி மூச்சு வரை நடித்துக் கொண்டே இருப்பேன்.

English summary
Actress Trisha has explained as to why she called off her wedding with producer Varun Manian.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos