»   »  எப்பவும் இப்படியே இருக்க மாட்டேன்.. சொல்கிறார் சன்னி லியோன்

எப்பவும் இப்படியே இருக்க மாட்டேன்.. சொல்கிறார் சன்னி லியோன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: எப்போதும் ஒரே துறையில் இருக்கக் கூடாது. வேறு வேறு துறைகளுக்கு மாறி மாறிப் போய்க் கொண்டே இருக்க வேண்டும். நானும் அப்படித்தான், சினிமாவிலேயே நிலைத்து இருப்பேன் என்று நான் கருதவில்லை என்று கூறியுள்ளார் நடிகை சன்னி லியோன்.

கனடாவில் ஆபாசப் பட நடிகையாக வலம் வந்தவர் சன்னி லியோன். இந்தியாவில் நடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் பாலிவுட் நடிகையானார்.

இவர் நடித்த முதல் படம் ஜிஸ்ம் 2.

ஆபாசப்பட நடிகை...

2011 முதல் நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் பெரிய அளவில் இந்தித் திரையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர் ஆபாசப் பட நடிகையாக இருந்ததால் பெரிய ஹீரோக்கள் இவருடன் சேர்ந்து நடிக்க தயங்கும் நிலையும் உள்ளது. இந்த நிலையில் தான் நீண்ட காலம் சினிமாவில் இருக்கப் போவதில்லை என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் சன்ன லியோன்.

துரதிர்ஷ்டவசமாக...

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. மாறி கொண்டே இருக்க வேண்டும். நானும் அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவள்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் சினிமாவில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இருப்பினும் இதிலேயே இருப்பேன் என்று நான் கருதவில்லை.

மாற்றம் தேவை...

ஒரு துறையில் தொழிலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும்" என்றார் அவர்.

குத்துப்பாட்டு...

ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ் 2, ஏக் பஹேலி லீலா என பல படங்களில் நடித்துள்ளார் சன்னி லியோன். சமீபத்தில் ஷாருக் கானின் ரயீஸ் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார்.

லஸ்ட்...

சமீபத்தில் லஸ்ட் என்ற பெயரில் ஒரு வாசனை திரவியத்தை வெளியிட்டார் சன்னி லியோன். இது இவரது நிறுவனம் உருவாக்கியுல்ள படைப்பாகும் என்பது குறிப்பிடத்தகக்து. கடைசியாக இவர் நடித்த படம் ஒன் நைட் ஸ்டாண்ட் ஆகும்.

 

 

English summary
Actress Sunny Leone says being a part of films is not going to be forever for her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos