twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோல்டன் குளோப்பைத் தொடர்ந்து பாஃப்டா விருதுகளை அள்ளிய 'தி ரெவனெண்ட்'... ஆஸ்கரில் சாதிக்குமா?

    By Manjula
    |

    லாஸ் ஏஞ்செல்ஸ்: கடந்த மாதத்தில் 3 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற தி ரெவனெண்ட் திரைப்படம் தற்போது பாஃப்ட்டா விழாவில் 5 விருதுகளை வென்றிருக்கிறது.

    நேற்று முன்தினமான காதலர் தினத்தில் பிரிட்டன் நாட்டின் சிறந்த திரைப்படங்களுக்கான பாஃப்ட்டா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் டி காப்ரியோ நடிப்பில் வெளியான தி ரெவனெண்ட் மற்றும் ஒரு தாயின் போராட்டத்தை வெளிபடுத்தும் ரூம் உட்பட ஏராளமான படங்கள் விருதுகளைத் தட்டிச் சென்றன.

    தி ரெவனெண்ட்

    தி ரெவனெண்ட்

    நேற்று முன்தினம் பிரிட்டன் நாட்டின் சிறந்த திரைப்படங்களுக்கான பாஃப்ட்டா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் டி காப்ரியோ நடிப்பில் வெளியான தி ரெவனெண்ட் திரைப்படம் சிறந்த நடிகர்(டி காப்ரியோ), சிறந்த இயக்கம்(அலேஜாண்ட்ரோ கோன்ஸாலேஸ்), சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிசேர்க்கை உட்பட 5 பிரிவுகளில் விருதுகளை அள்ளியது.

    ஆஸ்கர் விருது

    ஆஸ்கர் விருது

    ஏற்கனவே ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் தி ரெவனெண்ட் 3 விருதுகளை வென்றது. இதனால் வருகின்ற ஆஸ்கர் விருதுகள் விழாவில் தி ரெவனெண்ட் திரைப்படம் அதிகபட்ச விருதுகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரூம்

    ரூம்

    ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு சிறிய அறையில் 5 வருடங்கள் போராடும் இளம் தாயாக நடித்திருந்த பிரயி லார்சனுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. தனது குழந்தையிடம் இந்த சிறிய அறைதான் மொத்த உலகமும் என்று நம்ப வைப்பதிலும், அந்த அறையை விட்டு தப்பிச் செல்லும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக பிரயி லார்சன் இந்த விருதை வென்றார்.

    4 விருதுகள்

    4 விருதுகள்

    4 விருதுகள்

    ஆவணப்படம்

    ஆவணப்படம்

    மறைந்த பின்னணி மற்றும் பாப் பாடகி அமி வைன்ஹவுஸ்-ன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான 'அமி' சிறந்த ஆவணப்படமாக தேர்வானது. இப்படம் இந்திய-பிரிட்டன் இயக்குநரின் இயக்கத்தில் உருவானது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த திரைக்கதை

    சிறந்த திரைக்கதை

    மேலும் பத்திரிகையாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்பாட்லைட்' திரைப்படம் சிறந்த (ஒரிஜினல்) திரைக்கதைக்கான விருதையும், ‘தி பிக் ஷார்ட்' திரைப்படம் சிறந்த (தழுவல்) திரைக்கதைக்கான விருதையும் வென்றது.

    சிறந்த துணை நடிகர், நடிகை

    சிறந்த துணை நடிகர், நடிகை

    'பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸஸ்' படத்தில் ரஷிய உளவாளியாக நடித்த மார்க் ரைலான்ஸ் சிறந்த துணை நடிகர் விருதையும், ‘ஸ்டீவ் ஜாப்ஸ்' படத்தில் பெண் காரியதரிசியாக நடித்த டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட் சிறந்த துணை நடிகை விருதையும் வென்றனர்.

    இந்த விழாவில்

    இந்த விழாவில்

    லண்டன் நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் விழாவில் சமீபத்தில் மரணம் அடைந்த பிரிட்டன் நடிகர்கள் ஒமர் ஷெரிப், சயீத் ஜாப்ரி, கிறிஸ்டபர் லீ ஆகிய மூவருக்கும் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    2016 Bafta Awards: Di Caprio Won the 'best Actor' Award (The Revenant) and Brie Larson Won the Best Actress Award (Room).
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X