twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'டார்ஜான்' நாயகன் டென்னிமில்லர் காலமானார்

    |

    வாஷிங்டன்: டார்ஜான் பட நாயகனான பிரபல ஹாலிவுட் நடிகர் டென்னிமில்லர் காலமானார். அவருக்கு வயது 80.

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டென்னிமில்லர். இவர் நாயகனாக நடித்த டார்ஜான் படம் வெற்றி பெற்றதையடுத்து டென்னி பிரபலமடைந்தார்.

    6 அடி 4 அங்குல உயரத்தில் ஆஜானுபாகு தோற்றம் கொண்ட டென்னி, உடற்கல்வியில் தேர்ச்சி பெற்றவர். இவர் 1950ம் ஆண்டு வாக்கில் கூடைப் பந்து வீரராக திகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து 1959-ம் ஆண்டில் ‘தி ஏப் மேன்' என்ற படத்தில் டார்ஜான் வேடமேற்று நடித்தார்.

    இப்படம் கடந்த 1932-ம் ஆண்டில் ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரர் ஜான்னி வெயிஸ் மில்லர் நடித்த படத்தின் ‘ரீமேக்' ஆகும். இவை தவிர ‘தி பார்ட்டி' என்ற காமெடி படத்திலும் டென்னி நடித்துள்ளார்.

    வயது முதிர்வின் காரணமாக சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார் டென்னி. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் டென்னிக்கு ஏ.எல்.எஸ் நோய்த் தாக்கம் ஏற்பட்டது. தற்போது இந்நோய் தொடர்பான விழிப்புணர்விற்காகவே ஐஸ்பக்கெட் சவால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Actor and author Denny Miller passes

    நோய்த் தாக்குதலைத் தொடர்ந்து லாஸ் வேகாஸ் மருத்துவமனையில் டென்னி, தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி டென்னி மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மரணமடைந்த டென்னி இதுவரை 237 தொலைக்காட்சித் தொடர்களிலும், 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் திகழ்ந்தார் டென்னி.

    டென்னியின் மரணத்திற்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Tarzan hero Miller passed away at his home in Las Vegas Tuesday after being diagnosed in January with ALS (Lou Gehrig's Disease), the focus for the recently popular ice bucket challenges.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X