Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏஞ்சலினா ஜூலீயின் சம்பளம் எவ்ளோ தெரியுமா?
நியூயார்க்: ஹாலிவுட் படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை ஏஞ்சலினா ஜூலி பெற்றுள்ளார்.
ஹாலிவுட் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் என்ற பெருமையை ராபர்ட் டவுனி ஜூனியர் பெறுகிறார். கடந்தாண்டு அவரது வருமானம் 75 மில்லியன் டாலர்.
ஏஞ்சலினாவின் வருமானம்
ஆஸ்கார் விருது பெற்ற ஏஞ்சலீனா ஜூலி அதிக சம்பளம் வாங்கியவர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2013ம் ஆண்டில் 33 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.
ஜெனிபர் லாரன்ஸ்
இவருக்கு அடுத்தபடியாக ஜெனிபர் லாரன்ஸ் 26 மில்லியன் டாலர் பெற்று 2வது இடத்திலும், கிறிஸ்டன் ஸ்டூவர்ட் 21.5 மில்லியன் டாலர் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.
ஜெனிபர் ஆனீஸ்டன்
இதேபோன்று, 4வது மற்றும் 5வது இடத்தில் ஜெனீபர் ஆனீஸ்டன் 20 மில்லியன் டாலர் மற்றும் எம்மா ஸ்டோன் 16 மில்லியன் டாலர் வருமானமும் பெற்று உள்ளனர்.
ராபர்ட் டவுனி
ஹாலிவுட் நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் என்ற பெருமையை ராபர்ட் டவுனி ஜூனியர் பெறுகிறார். கடந்தாண்டு அவரது வருமானம் 75 மில்லியன் டாலர்.
மார்க் வால்பெர்க்
அவரை அடுத்து சானிங் டாட்டம் 60 மில்லியன் டாலருடன் 2வது இடமும், ஹக் ஜேக்மேன் 55 மில்லியன் டாலருடன் 3வது இடமும், 4வது இடத்தில் மார்க் வால்பெர்க் 51 மில்லியன் டாலர் பெற்றும் உள்ளனர்.
லியோனார்டோ டிகேப்ரியோ
டாப் 10 நடிகர்களில், டுவைன் ஜான்சன், லியோனார்டோ டிகேப்ரியோ, ஆடம் சாண்ட்லர், டாம் குரூஸ், டென்செல் வாஷிங்டன் மற்றும் லியாம் நீசன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.