twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இன்டர்ஸ்டெல்லாரை' முந்திய 'பிக் ஹீரோ 6': பாக்ஸ் ஆபிஸில் சாதனை

    By Mayura Akilan
    |

    என்னதான் அறிவுஜீவித்தனமாக படம் எடுத்தாலும் ஒரு அனிமேஷன் படம் வந்து அடிச்சிட்டு போயிருச்சேப்பா என்று அங்கலாய்கின்றனர் ஹாலிவுட்காரர்கள்.

    கடந்த வாரம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் பிக் ஹீரோ 6' என்ற அனிமேஷன் திரைப்படம் எதிர்பாராதவிதமாக 'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படத்தை முந்தி சாதனை படைத்துள்ளது.

    'இன்செப்ஷன்', 'டார்க் நைட் ரைஸஸ்' பட வெற்றிகளைத் தொடர்ந்து, பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'இன்டர்ஸ்டெல்லார்' கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரே சமயத்தில் வெளியானது. அதே நாளில் டிஸ்னியின் அனிமேஷன் படைப்பான 'பிக் ஹீரோ 6' படமும் வெளியானது.

    'Big Hero' beats 'Interstellar' in collection

    பயங்கர போட்டி

    முதல் இரண்டு நாட்களில் இந்த இரு படங்களுக்கும் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவியது. மூன்று நாள் முடிவில், 'பிக் ஹீரோ 6' சில மில்லியன் டாலர்கள் வித்தியாசத்தில் 'இன்டர்ஸ்டெல்லாரை' முந்தியது.

    அறிவுஜீவி படம்

    விண்வெளிப் படமான இன்ட்டெர்ஸ்டெல்லார் படம் பார்க்க 52% பேர் ஆண்களே வந்துள்ளனர். இப்படம் பார்த்தவர்களில் முக்கால் வாசிப்பேர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இப்படத்தை ரசிக்க அறிவில் முதிர்ச்சி தேவைப்படுகிறது. மேலும் இப்படம் 169 நிமிடங்கள் ஓடக்கூடிய பெரிய படமும் ஆகும்.

    சிறுவர்கள் பெண்கள்

    பிக் ஹீரோ 6 படமோ அனிமேஷன் படம் என்பதால் ஆண்கள் தவிர பெண்கள், பதின் வயதினர் மற்றும் சிறுவர்களை அதிகமாக ஈர்த்துள்ளது.

    மூன்று நாள் வசூல்

    பிக் ஹீரோ6 திரைப்படம் 56.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை 3 நாட்களில் வசூலித்துள்ளது. 'இண்டர்ஸ்டெல்லார்' சிறிய வித்தியாசத்தில் 52.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

    சிறுவனும், வெள்ளை எந்திரனும்

    டிஸ்னியின் தயாரிப்பான 'பிக் ஹீரோ - 6' இல் சிறுவர்களுடன் ஒரு எந்திரனும் இணைந்து தீயசக்தியை எதிர்ப்பதாக படம் எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் கொலுக் மொலுக் என குண்டாக இருக்கும் இந்த ரோபோ குதித்தும், நடந்தும், ஓடியும் சண்டை போடும் போது பேசும் வசனங்களை கேட்டும் அநேகம் பேர் ரசிக்கின்றனராம்.

    எதிர்பார்க்கவே இல்லைப்பா

    'பிக் ஹீரோ 6' தாங்கள் நினைத்ததை விட அதிகமாகவே வசூல் செய்துள்ளதாக டிஸ்னி விநியோகப் பிரிவின் தலைவர் டேவ் ஹாலிஸ் தெரிவித்தார்.

    வசூலோ வசூல்

    அதே நேரத்தில் 'இன்டர்ஸ்டெல்லார்', ஐமேக்ஸ் திரையரங்குகளில் மட்டும் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு படங்களையும் தொடர்ந்து, கான் கெர்ல், ஓயூஜா, செயிண்ட் வின்சென்ட் போன்றவை வசூல் வரிசையில் உள்ளன.

    நம்ம ஊரிலும் நடந்துச்சேப்பா

    கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படமும், ராமராஜனின் கரகாட்டக்காரன் ஒரே நேரத்தில் வெளியானபோது கரகாட்டக்காரன் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அப்போ கமல் சொன்னதுதான் இப்பவும்... இப்படியாகும்னு எதிர்பார்க்கலியேப்பா....

    English summary
    Disney's animation movie 'Big Hero' released in 3,761 theaters hits the box office by collecting $56.2 million whereas its rival Christopher Nolan's 'Interstellar has collected $50 million dollars and this is released in 3,561 theatres only.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X