twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்டர்ஸ்டெல்லர் புகழ் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த அதிரடி 'டன்கிர்க்'

    By Manjula
    |

    லாஸ் ஏஞ்செல்ஸ்: 21 ம் நூற்றாண்டின் சிறந்த இயக்குநர் என்று கொண்டாடப்படும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்தப் படம் 2 வது உலகப்போர்.

    உண்மைதான். டன்கிர்க் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை முழுக்க முழுக்க 2 வது உலகப்போரை மையமாக வைத்து எடுக்கவிருக்கிறார்.

    Christopher Nolan's Next Movie Dunkirk

    இதற்காகத் தற்போது நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து வருகிறாராம் நோலன்.

    கிறிஸ்டோபர் நோலன்

    21 ம் நூற்றாண்டின் சிறந்த இயக்குநர், இயக்குனர்களின் மாஸ்டர் என்று புகழப்படும் கிறிஸ்டோபர் நோலன் 1998 தொடங்கி 2015 வரை வெறும் 9 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். இயக்கியது குறைவான படங்கள் என்றாலும் உலகளவில் தலைசிறந்த இயக்குநர் என்ற பெயர் நோலனுக்கு எப்படிக் கிடைத்தது. ரொம்ப சிம்பிள் நோலன் இயக்கும் படங்களை ஒருமுறை ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தால் அதன்பிறகு சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு முறையும் அவரது படங்கள் ஒரு புதுவித அனுபவத்தைத் தருகின்றன என்று கூறுகிறார்கள்.

    ரசிகனின் கையில்

    ஒரு படத்தில் கிளைமாக்ஸ் இயக்குநர் விருப்பத்திற்கு இல்லாமல் ரசிகனின் விருப்பத்திற்கு மாறியது நோலன் படங்களில்தான்.நோலனின் படங்களுக்கு முன்னால் இது போன்ற படங்கள் வந்திருந்தாலும் இவரது படங்களைக் கொண்டாடிய அளவிற்கு ரசிகர்கள் வேறு யாரின் படத்தையாவது கொண்டாடினார்களா? என்பது சந்தேகமே.

    பேட்மேன் vs சூப்பர்மேன்

    ஹீரோவுக்கு மட்டுமல்ல வில்லனுக்கும் நியாயம் உண்டு என்று தனது பேட்மேன் படத்தின் மூலம் சொன்ன நோலனின் மேற்பார்வையில் தற்போது பேட்மேன் vs சூப்பர்மேன் உருவாகி இருக்கிறது. ஒரு சுபயோக தினத்தில் வெளியாகப் போகும் இந்தப் படத்திற்காக அகில உலக ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    டன்கிர்க்

    இந்நிலையில் 2 வது உலகப்போரை டன்கிர்க் என்ற பெயரில் படமாக்க நோலன் திட்டமிட்டு இருக்கிறார்.1940ம் ஆண்டு மே 27 ம் தேதி 2 வது உலகப் போரைத் துவக்கிய ஹிட்லர் டன்கிர்க் துறைமுகத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுமார் 40,000 வீரர்களை சிறைப் படுத்தினார். சர்ச்சிலின் வியூகத்தால் 2 லட்சம் வீரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினாலும் 40,000 வீரர்களை ஹிட்லர் கைது செய்தது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது. தற்போது இந்த வரலாற்று சம்பவத்தை படமாக எடுக்க நோலன் முடிவு செய்திருக்கிறார்.

    அழுத்தமான கதை

    இது குறித்து வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கிரேக் சில்வர்மேன் (கிரியேடிவ்&புரொடக்ஷன் பிரெசிடென்ட்) கூறும்போது " நாங்கள் தொடர்ந்து நோலனுடன் பணியாற்றி வருவது சிலிர்ப்பாக உள்ளது. அவர் எப்பொழுதும் வித்தியாசமாகவும் அதே நேரம் வணிக ரீதியிலான வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் டன்கிர்க் ஒரு அழுத்தமான படமாக இருக்கும். கிறிஸ்டோபர் மற்றும் எம்மா இருவரின் முயற்சியில் உருவாகும் இந்தப் படத்தை பெரிய திரையில் காண ஆவலாக இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

    ஹாலிவுட் நடிகர்கள்

    இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர்களான கென்னெத் ப்ராங், மார்க் ரிலான்ஸ் மற்றும் டாம் ஹார்டி ஆகியோரை நடிக்க வைக்க நோலன் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். வரலாற்றுப் படம் அதுவும் போர் சம்பந்தமான படமென்பதால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்றும் கூறுகின்றனர்.

    எம்மா தாமஸ்

    கிறிஸ்டோபர் நோலனின் மனைவி எம்மா தாமஸ் இந்தப் படத்தில் வரும் முக்கியமான பாத்திரங்களில் டீன்ஏஜ் வயதினரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.இதற்காக அவர் லண்டனில் உள்ள டீனேஜ் வயதினரை தற்போது தேர்வு செய்து வருகிறாராம்.

    2017 ம் ஆண்டில்

    இந்தப் படத்தினை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடித்து விடுமாறு வார்னர் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தற்போது தீவிரமாக திரைக்கதை அமைத்து வரும் நோலன் இந்த வருடம் மே மாதத்தில் படப்பிடிப்பினைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்.இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை உண்மையான இடங்களில் வைத்து படமெடுக்க நோலன் முடிவு செய்திருப்பதால் கண்டிப்பாக இப்படமும் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Hollywood Director Christopher Nolan's next Movie Dunkirk Based by 2nd World War True Story,This Movie Shooting Start in May, 2016.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X