»   »  ரேஸ் பிரியரா நீங்க... அப்ப, இது உங்களுக்கான படம்தான்!

ரேஸ் பிரியரா நீங்க... அப்ப, இது உங்களுக்கான படம்தான்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்... ரேஸ் ப்ரியர்களுக்கான அதிவேக திரைப்பட். கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை 6 பாகங்கள் வந்து வெற்றி பெற்றன. இதோ, அதன் ஏழாவது பாகம் இன்று இந்தியாவெங்கும் வெளியாகிறது.

ஹாலிவுட்டில் கார் சேஸ் காட்சிகளைத் தத்ரூபமாக எடுப்பார்கள். ஆனால் கார் சேஸை மட்டுமே ஒரு தனிப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும்.. அந்த யோசனையின் விளைவுதான் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்.

நியூயார்க் நகரில் இரவு நேரங்களில் நடைபெறும் கார் ரேஸ் பற்றி வெளியான ஒரு கட்டுரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது முதல் பாகம். இந்த பாகத்தை ராப் கோகன் இயக்க, பால் வாக்கர், வின் டீசல், தியானே ஜான்சன், மிச்செல் ரோட்ரிகிஷ், ஜோர்தனா புரூஸ்டெர் போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர்.இவர்களே அனைத்து பாகங்களிலும் நடிக்கும் நட்சத்திரங்கள்.

இரண்டாம் பாகம்

இரவு நேரத்தில் சட்ட விரோதமாக தெருக்களில் மரணத்துடன் விளையாடும் கார் ரேஸ். அதில் யார் ஜெயிப்பது என்பதே படம். 2003-ல் வெளியான இந்தப் பாகத்தில் நிசான் ஸ்கைலைன் ஜிடிஆர்34 ஸ்போர்ட்ஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டன.

மூன்றாம் பாகம்

மூன்றாம் பாகமான "ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் டோக்கியோ டிரிஃப்ட்" 2006-ல் வெளியானது. இந்தப் பாகத்தில் ஃபோர்டு மஸ்டாங் ரேஸ் கார்கள் பயன்படுத்தினர். இப்படத்தினை ஜெஸ்டின் லின் இயக்கியிருந்தார்.

 

 

நான்காம் பாகம்

நான்காவது பாகம் 2009-ல் வெளியானது. எஃப்.பி.ஐ. சீக்ரெட் ஏஜென்ட் பால்வாக்கல், போதைப்பொருள் கடத்தும் கும்பலைப் பிடிக்கும் ஒரு ஆக்ஷன் படமாக வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. ஆயில் டேங்க் கடத்துவது போன்ற காட்சியில் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட செடான் கார்கள் பயன்படுத்தப்பட்டன.

ஐந்தாம் பாகம்

2011ல் வெளியான ஃபாஸ்ட் ஃபைவ் படத்தின் க்ளைமாக்ஸ் சேசிங் காட்சிகளில் பிரத்யேகமாக டோட்ஜ் சேலஞ்சர் 2010 மாடல் கார்கள் பயன்படுத்தப்பட்டன. மூன்றாம் பாகத்தில் தொடங்கி ஆறாம் பாகம் வரையிலும் ஜெஸ்டின் லின் தான் இயக்குநர்.

ஆறாம் பாகம்

6-ம் பாகமாக வெளியான 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6'-ல் நிசான் ஜிடிஆர் கார் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தப்பட்டது. சுமார் 800 மில்லியன் டாலர் வரை வசூலைக் குவித்தது இந்தப் படம்.

7-ம் பாகம்

இதன் தொடர்ச்சியாக வெளியாகிறது பாஸ்ட் ஃபியூரியஸ் 7. ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 250 மில்லியன் பட்ஜெட்டில் படம் தயாராகி இன்று வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 2000 அரங்குகளில் படம் வெளியாகிறது.

English summary
Hollywood biggie Fast and Furious 7 is hitting more than 2000 screens in India in 4 languages.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos