twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”கண்களுக்காக” ஒரு யுத்தம்... கண்ணைக் கட்டும் கிராபிக்ஸ் காட்சிகள்- அசத்தும் “காட்ஸ் ஆப் ஈஜிப்த்”!

    |

    சென்னை: தமிழ் சினிமா உலகில் தமிழ்ப்படங்களுக்கு இணையாக மொழிமாற்றம் செய்யப்பட்ட மற்ற மொழிப் படங்களின் வருகையும் சரிசமமாகத்தான் இருந்து வருகின்றது.

    அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம்தான் "காட்ஸ் ஆப் ஈஜிப்த்" என்னும் அமானுஷ்யங்கள் நிறைந்த படம்.

    எகிப்தில் தங்கள் உடல்களில் ஒவ்வொரு பாகங்களிலும் வெவ்வேறு சக்தி படைத்தவர்கள் தங்களை கடவுள் என்று கூறி மக்களை ஆண்டு வருகிறார்கள். இவர்களின் ஒரு அரசனுக்கு இரண்டு மகன்கள்.

    பாகப்பிரிவினை:

    பாகப்பிரிவினை:

    இரண்டு பேருக்கும் அந்த நாட்டை பிரித்துக் கொடுக்கும்போது அண்ணனுக்கு நாட்டையும், தம்பிக்கு பாலைவனத்தையும் பிரித்துக் கொடுக்கிறார் அரசன்.

    தவிக்கும் தம்பி:

    தவிக்கும் தம்பி:

    அண்ணனின் அதிகாரத்துக்குட்பட்ட நாட்டில் செல்வம் செழித்து குலுங்க, அதை ஆண்டு அனுபவித்து வருகிறான். ஆனால், தம்பியோ பாலைவனத்தில் எதுவும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறான்.

    அண்ணனைக் கொல்லும் தம்பி:

    அண்ணனைக் கொல்லும் தம்பி:

    இந்நிலையில், அண்ணன் தன்னுடைய மகன் ஹராசுக்கு மகுடம் சூட்ட முடிவெடுக்கிறார். இதில் பங்குபெற தம்பியான செட் தனது படைகளுடன் நாட்டுக்குள் வருகிறான். அப்போது சில சூழ்ச்சி வேலைகள் செய்து அண்ணனை கொன்று அவனது ஆட்சியை கைப்பற்றுகிறார் செட்.

    மகனுக்கு உயிர்ப்பிச்சை:

    மகனுக்கு உயிர்ப்பிச்சை:

    பின்னர், அவரது மகனான ஹாராசையும் கொல்லப் பார்க்கிறார். அப்போது அவரது மனைவி செட்டிடம் உயிர் பிச்சை கேட்க ஹராசின் சக்தி நிறைந்த இரண்டு கண்ணைகளையும் பிடுங்கிவிட்டு அவனை உயிரோடு பாலைவனத்துக்கு அனுப்பிவிடுகிறார் செட்.

    அடிமையின் முடிவு:

    அடிமையின் முடிவு:

    அந்த ஆட்சிக்குட்பட்ட கடவுள்களையும், மக்களையும் அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹராசின் கண் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அடிமையாக பணிபுரியும் தனது காதலியையும், நாட்டு மக்களையும் அடிமைத்தனத்தில் இருந்து மீட்க வேண்டுமானால் அந்த கண்ணை மீட்டு ஹராசிடம் ஒப்படைத்தால் அவனது சக்தி மூலமாக நாட்டை காப்பாற்றலாம் என நினைக்கிறான் பெக் என்ற அடிமை.

    இறந்து போகும் காதலி:

    இறந்து போகும் காதலி:

    இதனால் தனது காதலி மூலமாக அந்த கண் இருக்கும் ரகசிய இடத்திற்குள் நுழைந்து ஒரு கண்ணை கைப்பற்றுகிறான். அப்போது, எதிர்பாராதவிதமாக பெக்கின் காதலி கொல்லப்படுகிறாள். காதலி இறந்த சோகத்தில் இருக்கும் பெக், ஹராசை சந்தித்து தனது காதலியை காப்பாற்றினால் அவனுக்கு அந்த கண்ணை கொடுப்பதாக கூறுகிறான்.

    வியக்க வைக்கும் கிராபிக்ஸ்:

    வியக்க வைக்கும் கிராபிக்ஸ்:

    இதற்கு ஹராஸ் சம்மதித்து பெக்கின் காதலியை உயிர்ப்பித்தாரா? நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டாரா? என்பதே மீதிக்கதை. படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை நம்மை வியக்க வைப்பது படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள்தான். அதேபோல், படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    "Gods of Egypt" is a fantasy film featuring ancient Egyptian deities.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X