»   »  நான் ஒரு சோம்பேறி: சொல்கிறார் வயசானாலும் அழகும், இளமையும் குறையாத நடிகை

நான் ஒரு சோம்பேறி: சொல்கிறார் வயசானாலும் அழகும், இளமையும் குறையாத நடிகை

Posted by:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: வயதானாலும் இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் ஹாலிவுட் நடிகை மோனிகா பெல்லூச்சி தனக்கு ஜிம் போகும் பழக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை மோனிகா பெல்லூச்சி(50). இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய். கணவரை பிரிந்து வாழும் அவர் வயதானாலும் இன்னும் அழகும், இளமையும் குறையாமல் சூப்பராக உள்ளார்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் மோனிகா.

ஸ்பெக்டர் நாயகி

மோனிகா தற்போது ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஜிம்

நான் இதுவரை ஜிம்முக்கு சென்றதே இல்லை. நான் ரொம்ப சோம்பேறி. ஒல்லிக்குச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் இல்லை என்று மோனிகா தெரிவித்தார்.

அழகு

இயற்கையாகவே ஒல்லியாக இருந்தால் அது அழகு தான். ஆனால் நீங்கள் பூசினாற்போல் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்றார் மோனிகா.

யோகா

நான் நன்றாக சாப்பிடுவேன். தவறாமல் யோகா செய்வேன். உடலை கட்டுக்கோப்பாக வைக்க உணவை ஒதுக்குபவள் நான் இல்லை. நான் பாஸ்தா, சாக்லேட் எல்லாம் நன்றாக சாப்பிடுவேன் என்றார் மோனிகா.

English summary
Actress Monica Bellucci says she's "too lazy" to go to the gym and has accepted she is a woman who has curves.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos