»   »  இஸ்லாம் பக்கம் திரும்பிய ஹாலிவுட் நடிகை லின்ட்சே: குர்ஆனும் கையுமாக உள்ளார்

இஸ்லாம் பக்கம் திரும்பிய ஹாலிவுட் நடிகை லின்ட்சே: குர்ஆனும் கையுமாக உள்ளார்

Posted by:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கண்மூடித்தனமாக கார் ஓட்டி சிக்கிய வழக்கில் ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன் ப்ருக்ளினில் உள்ள குழந்தைகள் மையத்தில் சமூக சேவை செய்கிறார். அப்போது அவர் கையில் இஸ்லாமியர்களின் புனிதநூலான திருக்குர்ஆனை வைத்திருந்தார்.

ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன் குடி, போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கி சீரழிந்துவிட்டார். தற்போது அவர் கெட்டப் பழக்கங்களில் இருந்து விடுபடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு கண்மூடித்தனமாக கார் ஓட்டி சிக்க வழக்கில் அவர் 125 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

லின்ட்சே லோஹனோ பத்து மணிநேரத்திற்கும் குறைவாகத் தான் சமூக சேவை செய்தார்.

சிறை

லின்ட்சே வரும் 28ம் தேதிக்குள் 125 மணிநேர சேவையை முடிக்கவில்லை என்றால் ஒன்றரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி மார்க் யங் கடந்த வாரம் தெரிவித்தார்.

குழந்தைகள் மையம்

நீதிமன்ற உத்தரவையடுத்து லின்ட்சே நியூயார்க் நகரில் உள்ள ப்ருக்ளினில் இருக்கும் குழந்தைகள் மையத்தில் சேவையை நேற்று துவங்கினார். அவர் மையத்தில் உள்ள குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

குர்ஆன்

ப்ருக்ளின் மையத்தில் இருந்து வெளியே வந்த லோஹனின் கையில் இஸ்லாமியர்களின் புனிதநூலான திருக்குர்ஆன் இருந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவரான அவர் பிற மதங்கள் மீது ஆர்வம் காட்டுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

புத்தமதம்

முன்னதாக அவர் புத்த மதத்தின் மீது ஆர்வம் கொண்டு அது தொடர்பான வகுப்புகளுக்கு சென்றார். தான் ஒரு ஆன்மீகவாதி என்று லின்ட்சே ஓப்ரா வின்ப்ரே நிகழ்ச்சியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் கெட்டது

நடிக்க வந்த புதிதில் ஒழுங்காக இருந்த லின்ட்சே அவரது பெயரை அவரே கெடுத்துக் கொண்டார். இதனால் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் லின்ட்சே லோஹன் என்றாலே பிரச்சனைக்குரியவர் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது.

English summary
Troubled Hollywood actress Lindsay Lohan was spotted with a Quran as she stepped out of a Brooklyn children's centre on wednesday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos