twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் பிணமாகக் கண்டெடுப்பு

    By Shankar
    |

    Philip Seymour Hoffman: Actor Found Dead At 46
    நியூயார்க்: ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் பிலிப் செமோர் ஹாப்மேன் (46), நியூயார்க் நகர் வீட்டில் நேற்று பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    அவர் எப்படி மரணமடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. அளவுக்கதிகமான போதை மருந்து உட்கொண்டதால் அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

    ஹாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர் - இயக்குநராகத் திகழ்ந்தவர் பிலிப் செமோர் ஹாப்மேன். 1991-ம் ஆண்டு லா அண்ட் ஆர்டர் படத்தில் அறிமுகமானார். அடுத்தடுத்து துணை வேடங்களில் நடித்தாலும், கவனிக்கப்படும் நடிகராகத் திகழ்ந்தார்.

    சென்ட் ஆப் வுமன், ட்விஸ்டர், பூகி நைட்ஸ். மக்னோலியா, ரெட் ட்ராகன், கோல்ட் மவுன்டெய்ன் என அவர் நடித்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. அவருக்கும் பெயர் கிடைத்தது.

    2005-ல் கோபோடே என்ற படத்தில் நாயகனாக நடித்த அவருக்கு ஆஸ்கர் உள்பட உலகின் சிறந்த விருதுகள் பல கிடைத்தன.

    மிஷன் இம்பாஸிபிள் -3 -ல் முக்கிய வேடத்தில் நடித்தார். தி சாவேஜ் படத்துக்காக பல விருதுகள் வென்றார் ஹாப்மேன்.

    சார்லி வில்சன்ஸ் வார், டவுட் போன்ற படங்களில் மிகச் சிறப்பாக நடித்து விருதுகளைப் பெற்றார்.

    தி மாஸ்டர் படத்துக்காக 30 சர்வதேச விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றில் 20 விருதுகளை வென்றவர் பிலிப் செமோர் ஹாப்மேன். தி ஹங்கர்கேம்ஸ் - கேட்சிங் பையர் படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் அடுத்த இரு பாகங்களிலும் ஹாப்மேன் நடித்துவந்தார். அவற்றில் ஒரு பாகம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. மற்றொன்றின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

    இந்த நிலையில்தான், நியூயார்க்கில் உள்ள அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஹாப்மேன். அவரது நண்பர்தான் இதனை நேற்று பிற்பகல் போலீசாருக்குத் தெரிவித்தார்.

    ஹாப்மேனின் மரணம் ஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "ஹாப்மேன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, அதை வெளிப்படையாக அறிவித்தவர். அந்தப் பழக்கத்திலிருந்து விடுதலையாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றார். ஆனால் அதிலிருந்து விடுபட்ட மாதிரி வெளியில் காட்டிக் கொண்டார்.

    உண்மையில் இன்னும் அதிகமாக போதைக்கு அடிமையாகிவிட்டார்," என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

    Read more about: hollywood death மரணம்
    English summary
    Philip Seymour Hoffman, the famous Oscar-winning actor was found dead at his New York City apartment on Feb. 2 from an apparent drug overdose.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X