twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகளைத் தேடிச் செல்லும் பாசக்காரத் தந்தை – சான் ஆன்ட்ரியாஸ்

    By Manjula
    |

    லாஸ் ஏஞ்செல்ஸ்: நமது நாட்டில் நேபாளத்தில் அண்மையில் நடந்த நிலநடுக்கம் நம்மை வெகுவாகப் பாதித்து இருக்கும் இந்த நேரத்தில் பூகம்பத்தின் கோரத் தாண்டவம் பற்றி கூறும் சான் ஆன்ட்ரியாஸ் படம் இன்று உலகெங்கிலும் வெளியாகிஉள்ளது. மிகப் பயங்கரமான ஒரு நிலநடுக்கத்தை அமேரிக்கா எதிர் கொண்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து திரையில் படமாக ஓட விட்டிருக்கிறார்கள்.

    இந்த ஹாலிவுட் காரர்களுக்கு இந்த மாதிரி இயற்கைப் பேரழிவுகளின் மீது அப்படி என்ன ஒரு காதலோ சுனாமி, உலகம் அழிவது, புயல் மற்றும் எரிமலை இந்த வரிசையில் தற்போது பூகம்பம் பற்றி ஒரு படத்தை எடுத்து நாடெங்கும் மக்களுக்கு மரண பயத்தைக் கண்ணில் காட்டி வருகிறார்கள்.

    பூகம்பம் பற்றி சுமார் 30 வருடங்களுக்கு முன்பு எர்த் குவாக் என்ற படம் ஒன்று வந்தது அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சுமார் 100 மில்லியன் செலவில் வெளிவந்திருக்கும் சான் ஆன்ட்ரியாஸ் இந்த வரிசையில் முக்கியமான ஒரு படமாக விமர்சகர்களால் பார்க்கப் படுகிறது.

    சான் ஆன்ட்ரியாஸ் கதை இதுதான்

    சான் ஆன்ட்ரியாஸ் கதை இதுதான்

    படத்தின் நாயகன் டுவைன் ஜான்சன் பூகம்பம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று மக்களைக் காப்பாற்றும் மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் பிரிவின் தலைவராக இருக்கிறார், அவரது ஒரே மகள் சாண்ட்ரா தனது அப்பாவை வெறுத்து நீண்ட சென்று தனிமையில் வசித்து வருகிறார். ஹீரோ லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார், மகள் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் வசித்து வருகிறாள்.

    புயல் போலத் தாக்கும் பூகம்பம்

    புயல் போலத் தாக்கும் பூகம்பம்

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வரை மிகப் பெரிய பூகம்பம் ஒன்று தாக்குகிறது, இதனைக் கண்டு அஞ்சும் டுவைன் ஜான்சன் தனது மகளைக் காப்பாற்ற தனது மனைவியுடன் சான் பிரான்சிஸ்கோவுக்கு விரைந்து செல்கிறார்.

    தடைபடும் பயணம்

    தடைபடும் பயணம்

    பூகம்பத்திற்கு நடுவில் பயணம் செய்யும் பொது ஆங்காங்கே பூமி பிளந்து கொள்கிறது இதனால் ஹீரோவின் பயணம் தடைப் பட்டு சோர்ந்து போகும் போது அவரது பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்திய அனுபவம் தற்போது கைகொடுக்கிறது. ஒரு மீட்புக் ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு மகளைக் காப்பாற்ற விரைந்து செல்கிறார், அந்தக் கொடுமையான பூகம்பத்தில் இருந்து தனது மகளையும் நாடு மக்களையும் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

    நம்பிக்கை இழக்கும் ஹீரோ

    நம்பிக்கை இழக்கும் ஹீரோ

    பயணத்தின்போது கண்முன்னே நிலநடுக்கம் ஏற்பட தனது மகள் பிழைத்திருப்பாளா என்ற சந்தேகமும் கண்டிப்பாக அவள் உயிரோடு இருப்பாள் என்ற நம்பிக்கையும் மாறிமாறித் தோன்றி இரண்டிற்கும் மத்தியில் டுவைன் ஜான்சன் போராடுவது அவ்வளவு தத்ரூபம்.

    பூகம்பம் ஏற்படுத்தும் விளைவுகள்

    பூகம்பம் ஏற்படுத்தும் விளைவுகள்

    உலகின் மிகப் பெரிய நீர் ஆதாரங்கள் எப்படி உடைந்து சிதறுகின்றன வளரும் நாடுகளில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் பூகம்பம் எத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்முன்னே காட்டி பயம் கலந்த அச்சத்தை விதைக்கிறார் இயக்குனர் ப்ராட் பெய்டன்.

    டுவைன் ஜான்சன் பாசக்காரத் தந்தை

    டுவைன் ஜான்சன் பாசக்காரத் தந்தை

    உண்மையிலேயே டுவைன் ஜான்சனின் நடிப்பு இதில் பிரமாதம் மகளைக் காப்பாற்ற விரையும் தந்தையாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் ஹீரோதான் இந்த டுவைன் ஜான்சன், மனிதருக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமாக மாறியிருக்கிறது சான் ஆன்ட்ரியாஸ்.

    இந்தியாவில்

    இந்தியாவில்

    தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப் பட்டு நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்று படம் வெளிவந்துள்ளது, 3D எபக்ட்ஸ்ஸிலும் படத்தைக் காணலாமாம்.


    நிஜமாகவே பூகம்பத்த கண்ணுல காட்டிடாங்கப்பா....

    English summary
    When the earthquake hits and communications go down, digital technology isn't much help. Mobile phones stop working. The ground quite literally disappears beneath people's feet. Buildings crumble as if they are made of powder, bridges collapse, roads turn into gigantic craters. Fire and flooding follow. If the visuals all those high angle shots of apocalypse in modern American cities aren't enough to make us giddy, the rumbling surround sound adds to the disorienting effect. In terms of special effects, San Andreas is masterly. The CGI is seamless.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X