twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நூதன பெட்... அதில் ஜெயித்ததால் 40 மில்லியன் டாலர் சம்பாதித்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்!

    By Shankar
    |

    அது 1977-ம் ஆண்டு. ஜார்ஜ் லூகாஸ் தன் 'ஸ்டார் வார்ஸ்' படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

    அதே சமயத்தில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தன்னுடைய 'க்ளோஸ் என்கவுன்டர்ஸ் ஆப் தி தர்டு கைன்ட்' படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

    ஒரு நாள் ஸ்டார் வார்ஸ் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருந்த ஜார்ஜ் லூகாசுக்கு, படத்தின் மீது நம்பிக்கை இல்லை. சோர்ந்த மனதோடு அவர் தன் நண்பர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் க்ளோஸ் என்கவுன்டர்ஸ் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றார்.

    வித்தியாசமான பெட்

    வித்தியாசமான பெட்

    ஸ்பீல்பெர்க் படம் தன் படத்தை விட நன்றாக ஓடும் என்று தோன்றிவிட்டது லூகாஸுக்கு. இதுபற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்த போது இருவரும் ஒரு பெட் கட்டினர். அதுவும் எழுத்துப்பூர்வமாக!

    என்ன டீல்?

    என்ன டீல்?

    அதாவது, முதலில் வெளியாகும் ஸ்பீல்பெர்க் படம் நன்றாக ஓடினால், அதில் இரண்டரை சதவீதத்தை தன் பங்காகத் தரவேண்டும் என்று ஜார்ஜ் லூகாஸ் சொன்னார். அதற்கு ஒப்புக் கொண்ட ஸ்பீல்பெர்க், ஸ்டார் வார்ஸ் சிறப்பாக ஓடினால், அதன் இரண்டரை சதவீத பங்கை தனக்குத் தரவேண்டும் என பெட் வைத்தார்.

    பங்கு கொடுத்தார் ஸ்பீல்பெர்க்

    பங்கு கொடுத்தார் ஸ்பீல்பெர்க்

    முதலில் வெளியானது ஸ்பீல்பெர்க் படம். நன்றாகத்தான் ஓடியது. மொத்தம் 303 மில்லியன் டாலர்களையும் பாராட்டுக்களையும் குவித்தது. சொன்னதுபோலவே, லூகாஸுக்கு 2.5 சதவீத லாபத் தொகையைக் கொடுத்துவிட்டார் ஸ்பீல்பெர்க். அதாவது தியேட்டர் வசூல், வீடியோ, டிவி ரைட்ஸ் என அனைத்து வகையிலும் கிடைத்த வருமானத்தில் 2.5 சதவீதம்.

    பம்பர் ஹிட் ஸ்டார்வார்ஸ்

    பம்பர் ஹிட் ஸ்டார்வார்ஸ்

    அடுத்து வெளியான ஸ்டார் வார்ஸ், அதன் இயக்குநரே எதிர்ப்பார்க்காத அளவுக்கு பெரிய ப்ளாக்பஸ்டரானது. அந்த ஒரே ஆண்டில் 773 மில்லியன் டாலர்களைக் குவித்தது. அதில் இரண்டரை சதவீதத்தை ஸ்பீல்பெர்க்குக் கொடுத்தார் ஜார்ஜ் லூகாஸ்.

    ரூ 40 மில்லியன் டாலர்கள்

    ரூ 40 மில்லியன் டாலர்கள்

    இன்றுவரை க்ளோஸ் என்கவுன்டர்ஸ் பெறும் வருமானத்தில் 2.5 சதவீதம் லூகாசுக்கும், ஸ்டார் வார்ஸ் பெறும் வருவாயில் 2.5 சதவீதம் ஸ்பீல்பெர்க்குக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இருவருக்குமே லாபம்தான் என்றாலும், லூகாசுக்கு லாபத்தில் நஷ்டம். இதுவரை ஸ்பீல்பெர்க்குக்கு 40 மில்லியன் டாலர்கள் இந்த பெட் மூலம் கிடைத்திருக்கிறது!

    கார்ட்டூன்கள்

    கார்ட்டூன்கள்

    இந்த பெட் குறித்து வெளியான சமீபத்தில் வெளியாகியுள்ள சில கார்ட்டூன்கள், இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி வாழ்த்திக் கொண்டிருப்பார்கள் என்பதைக் காட்டுவதாக இருந்தது.

    English summary
    Trivia: Here is the story how Steven Spielberg Won Millions of ‘Star Wars’ Dollars in a Bet With George Lucas.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X