» 

உயர்திரு 420: சினேகனுக்கு அறிமுகப் பாடல் எழுதிய வாலி!!

Posted by:

Vaali
இயக்குநர்கள்தான் ஹீரோவாக வேண்டுமா என்ன... பாடலாசிரியரும் ஆகலாமே என ஹீரோ ரூட் போட்டவர் பா விஜய். அவரது வரிசையில் இப்போது சினேகன்.

இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'உயர்திரு 420'. கதாநாயகியாக மேக்னா நடிக்கிறார்.

கதை, திரைக்கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் பிரேம்நாத். இவர் பாரதிராஜாவிடம் பணிபுரிந்தவர். படத்தில் ஜெயப்பிரகாஷ், வசீகரன், ராஜ்கபூர், சிட்டிபாபு, ரமேஷ்கண்ணா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாக உயர்திரு 420 உருவாகி வருகிறதாம். இந்தப் படத்துக்காக சண்டைப் பயிற்சியாளர் 'பவர்' பாண்டியனிடம் சினேகன் 6 மாதங்கள் சிறப்புப் பயிற்சிகள் பெற்றுள்ளாராம்.

படத்தில் சினேகனுக்கான அறிமுகப் பாடலை எழுதியுள்ளவர் கவிஞர் வாலி!

படம் குறித்து சினேகனிடம் பேசினோம்:

"ஹீரோவாக வேண்டும் என்பது என் ஆசையல்ல. ஆனால் நடிப்பதற்கான நல்ல வாய்ப்பு வந்தபோது விட வேண்டாமே என்று ஏற்றுக்கொண்டேன். ஏற்ற பிறகு அதற்கேற்ப தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டேன்", என்கிறார்.

மலேசியாவின் மன்னர் அரண்மனை, பிரதமர் இல்லம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசு இடங்களில் சிறப்பு அனுமதியுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். படத்தில் மேக்னாவுடன், அக்ஷாரா கௌடா என்ற மும்பை மாடல், 'கலாபக்காதலன்' படத்தில் நடித்த அக்ஷயா, ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Read more about: உயர்திரு 420, கவிஞர் வாலி, சினேகன், snehan, uyarthiru 420, vaali
English summary
Leading lyricist Snehan made his debut as hero in new director Gowthaman's Uyarthiru 420. Megna Raj is playing as his lead lady.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos