twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெருப்பு குமாரின் சின்னப்புள்ளத்தனமான ஆசை என்ன தெரியுமா?

    By Soundharya
    |

    "நெருப்பு குமார்" அருண் ராஜா காமராஜ் வளர்ந்து வரும் நடிகர், பாடகர், பாடலாசியர் என முப்பரிமான திறமைகளை கொண்டவர். அவர் எழுதிய, பாடிய பல பாடல்கள் இன்று இளைஞர்களிடம் வெகுவாக பரவி வருகின்றது.

    அவர் நடித்த நடித்த ராஜா ராணி, மான் கராத்தே ஆகிய படங்கள் அவருக்கு மக்களிடம் மிகுத்த வரவேற்பை பெற்றுத் தந்தது. விரைவில் வெளியாக இருக்கக்கூடிய கபாலி படம் பற்றியும், இணையத்தில் பரவிவரும் நெருப்புடா என்ற டிரெண்ட்டிற்கு சொந்தகாரராகிய அருண்ராஜா காமராஜ் நமக்கு அளித்த பேட்டி:

    Arunraja Kamaraj's Interview

    அடுத்த கமிட்மென்ட் ?

    அடுத்த படம்... இன்றிலிருந்து இருந்து படம் சூட்டிங் ஆரம்பம்மாகியுள்ளது. முன்டாசுப்பட்டியின் உதவி இயக்குனர் இயக்கும் திரைப்படத்தில் ஆதி மற்றும்
    நிக்கி கல்ராணி ஆகியோருடன் நடிக்கின்றேன். இது நடிகராக நான் நடிக்கும் 7-வது திரைப்படம்.

    இணையங்களில் நெருப்புக்குமார் என்று பரவிவருகின்றதே...?

    ராஜா ராணி-ல என்னோட Character பேரு நெருப்புக்குமார், So அது அப்டியே பரவிருச்சு. and கபாலி படத்துல நெருப்புடா-ன்னு வந்தது எல்லாமே coincident தான். ஆனா, அந்த பேருக்கும், இந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    Arunraja Kamaraj's Interview

    உங்கள் கனவு இயக்குனர் ஆவதே. அதை பற்றி ... ?

    பொழுதுபோக்கை மையமாக கொண்டே ஒவ்வொரு கதையும் எழுப்படுகின்றது. தற்சமயம் கூட 3 கதைகள் ரெடியாக உள்ளது. ஒவ்வொன்னும் ஒவ்வொரு கதை. இப்போ நிறைய வேலை போயிட்டு இருக்குறதால கூடிய சீக்கிரம் அந்த வேலையையும் பார்க்கபோகின்றேன்.

    உங்க காலேஜ் பிரெண்ட் சிவகார்த்திகேயனை வைத்து எதாவது படம் இயக்க idea இருக்கா?

    Arunraja Kamaraj's Interview

    இப்போதைக்கு சிவாவிற்காக எந்த கதையும் இதுவர ரெடி பண்ணல, சிவாவிற்காக கதை பண்ணும் பொழுது, கண்டிப்பா அவருக்கு பிடிச்சிருந்தா பண்ணுவேன்.

    Arunraja Kamaraj's Interview

    கார்த்திக் சுப்புராஜுடனான நட்பு எப்படி..?

    கார்த்திக்குடன் இரண்டு படங்கள் பாடல்களுக்காக இணைந்து வேலை பார்த்தது தான். close பிரெண்ட் இல்ல.. professional - ஆ தெரியும்.

    குத்து பாட்டினை தவிர ரொமாண்டிக் பாடல் ஏதாவது எழுதியதுண்டா..?

    இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பீட்சா 2 வில்லா மற்றும் காக்கிசட்டை என்ற இரு படங்களில் ரொமாண்டிக் பாடல்கள் எழுதியுள்ளேன்.

    கபாலி டீசருக்கு பிறகு உங்க ரியாக்சன் ..?

    டீசருக்கு அப்புறம் ஹேப்பி தான்.

    Arunraja Kamaraj's Interview

    பிடித்த இயக்குனர் ?

    கிறிஸ்டோபர் நோலன்

    இயக்குனராக வேண்டும் என்று எப்படி ஆசை வந்தது ?

    காலேஜ்ல நானும் சிவாவும் சேர்ந்து நிறைய கதை, மற்றும் பலவற்றில் ஈடுபட்டுள்ளோம். காலேஜ்ல நிறைய கல்சுரல்ஸ்-ல கலந்துகிட்டது, அதுல ஜெயிச்சது இதெல்லாம் தான் சினிமால ஆர்வம் வந்துச்சு. ஒருவேள அதுல ஜெயிக்காம, கலந்துக்காம இருந்திருந்தா படிச்ச படிப்புக்கு தான் வேலைக்கு போயிருப்பேன். ஸ்க்ரிப்ட்-அ பத்தி நிறைய பேசிருக்கோம். அதுவே தொழிலா மாறும்னு எதிர்பார்க்கல.. நாளைய இயக்குனர் பார்ட் 2-ல கலந்துகிட்டது இன்னும் இயக்குநராகனும்னு ஆசை வந்தது.

    வீட்டுல ஆசை பட்டது ?

    என்ஜீனியர் படிக்கணும்னு யாரும் கட்டாயப்படுத்தல, அப்பாவோட ஆசை நான் ஐஏஎஸ் படிக்கணும், கலெக்டர் ஆகி ஒரு பெரிய பதவில இருக்கணும்னு ஆச பட்டாரு. நல்லா படிச்சிருந்தா என்ன டாக்டர் ஆக்கியிருப்பாரு, இல்லாததால இஞ்சினியர் ஆகிட்டாரு.

    முதன் முதலில் பாட்டு பாடிய அனுபவம் பற்றி ?

    முதன் முதலில் நான் பாடிய பாடலே, நான் எழுதியதுதான். உயிர்மொழி என்ற படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நான் பாடிய முதல் பாடல். அதன் பிறகு தான் ஜிகர்தண்டா பட பாடல். அந்த பாடல் அவ்வளவு ஹிட் ஆகும்னு எதிர்பார்க்கல. அதுக்கு பிறகு தெறி படம், கபாலி படத்தில் நெருப்புடா இன்னும் ஹிட் அடித்து மிகப்பெரிய விஷயமா இப்போ வந்திருக்கு.

    காலேஜ் சீனியர் சந்தோஷ் நாராயணன் ராக்கிங் பண்ணிருக்கறா..?

    இல்லவே இல்ல, எங்க காலேஜ்ல ராக்கிங்-ன்னு எதுமே நாங்க பாத்ததில்லை. சொல்லப்போனா எங்க காலேஜ்ல எங்க சீனியர்களுக்கு நாங்க செல்லம்ன்னா அவங்க எங்களுக்கு செல்லம். நாங்க எப்போவுமே ஒரு டீம்மாதான் இருப்போம். அண்ணன் தம்பி உறவு தான் எங்களுக்குள்ள. இப்போவுமே. சீனியர் ஜூனியர்-ன்னு யாரும் நினைக்க மாட்டோம்.

    உதவி இயக்குனர் அனுபவம் எப்படி இருந்தது..?

    உதவி இயக்குனாராக நிறைய விஷயங்கள நான் கத்துக்கிட்டேன். ஒரு குறும் படத்தில இருந்து ஒரு பெரிய படம் பண்ணணும்னா என்னெல்லாம் பண்ணனும்னு
    கத்துக்கிட்டேன். நான் குறும்படம் இயக்கும் பொழுது, எல்லாமே நாங்களே தான் பாத்துக்கணும். அதுல ஆர்ட் டைரக்டர், மேக்கப் மேன், காஸ்டியும் டிசைனர் யாருமே கிடையாது. நானும், சினி போடோகிராபர், எடிட்டர் மட்டும் தான். அத தாண்டி ஒரு படத்துல எவ்ளோ பேரு, என்ன நடக்கும், ஒரு இடத்துக்கு போய் அந்த இடத்த எப்டி செலக்ட் பண்ணனும், லைட் எதுக்கு, எப்படி பண்ணனும்னு எல்லாமே நான் அசிட்டன்ட் டைரக்டரா இருந்துதான் கத்துக்கிட்டேன். ஒரு டைரக்டருக்கு எவ்ளோ திறமை வேணும், சூழ்நிலைய எப்படி சாமாளிக்க கத்துக்கணும்னு எல்லாமே நான் கத்துக்கிட்டது நான் அச்சிடன்ட் டைரக்டரா இருக்கும் போது தான்.

    கபாலிக்கு எழுதுன பாட்ட கேட்டதும் எப்டி இருந்தது..?

    கபாலி படத்திற்கு பாட்டு எழுதுனதும், அத கேக்கும் போதும் நாமளா இத பண்ணோம்னு ஒரு ஆச்சிரியமான சந்தோசம் இருந்துச்சு.. ஆடியோ ரிலிஸ் ஆனதும்
    ஆடியன்ஸ் ரியாக்சன் எப்படின்னு பாக்கணும். எல்லாரும் அத எப்படி எடுதுக்கிறாங்கனு பாக்கணும். எல்லாருக்கும் பிடிச்ச ஒரு விஷயத்த நாமளும் பண்ணணும்ல..

    ஆடியோ ரிலிஸ் அப்போ ரஜினி சார முதல் முதல்ல பாக்க போறீங்க.. எப்படி இருக்கு உங்க எதிர்பார்ப்பு..?

    ரஜினி சார் என்ன சொல்ல போறாரு.. அப்படின்னு ஒரு எதிர்பார்ப்புல தான் நான் போறேன். ஒரு வேளை அவரு என்னோட பாட்ட பத்தி சொல்லலாம், சொல்லாமலும் இருக்கலாம். ஒருவேள என்ன பாராட்டலாம், என்னவேணும்னாலும் நடக்கலாம். அவர நேர்ல பார்க்கும் பொழுது அந்த "நெருப்புடா" வார்த்தையை அவரு வாயால சொல்ல வைக்கனும்னு ஒரு ஆசை இருக்கு. இது எனக்கிருக்குற ஒரு சின்ன புள்ளதனமான ஆசை.

    பிடிச்ச ஹீரோக்கள் பற்றி..?

    எனக்கு நிறைய ஹீரோக்கள பிடிக்கும். நான் விஜய் சாரோட ஃபேன், ஜி வி பிரகாஷ் என்னோட பிரெண்ட், சிவகார்த்திகேயன் என்னோட க்ளோஸ் பிரெண்ட், சூப்பர் ஸ்டார் ராஜினி சார்ர எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி எனக்கும் பிடிக்கும். நான் சின்ன வயசுல இருந்து அட்மியர் பண்ண ஒருத்தர். கமல் ஹாசன் சார் நடிப்புக்கு
    நான் ஒரு பெரிய பாலோவர். அஜித் சார அவ்ளோ பிடிக்கும். and நிறைய பேர பிடிக்கும். சிவாவ ஒரு பிரெண்ட்-ஆ நான் கூடவே இருந்து பார்த்திருக்கேன். இப்போ என்னோட பிரெண்ட் இவ்ளோ பெரிய ஆளா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி வளர்ந்து நிக்கிறத நெனைச்சு பெருமை படாத நிமிஷமே இல்லை.

    ஜி வி பிரகாஷ் உடனான நட்பு பற்றி..?

    ஒரு டைரக்டரா கதை சொல்ல போகும் பொழுது தான் நான் அவர முதல்ல பார்த்தேன். அதுக்கப்புறமா அவரு எனக்கு பாட்டு குடுக்க ஆரம்பிச்சாரு. அப்டியே பாட்டு மட்டுமில்லாம ஒரு பிரெண்டா, ஒரு வெல்விஷ்ரா, இன்னைக்கு ஒரு நெருங்கிய நண்பரா இருக்காரு. அவரு வளர்றத பாக்கும் பொழுது சந்தோசமா இருக்கு.

    Arunraja Kamaraj's Interview

    சினிமாக்கு வந்ததும் வீட்டுல இருக்குறவங்களோட அட்வைஸ் ?

    அப்பா கஷ்டப்படாதன்னு சொல்லிருக்காரு. அப்பா கஷ்டப்பட்டு எங்கள படிக்க வச்சாரு. நாம கஷ்ட பட்டு படிக்க வச்சும் நான் கஷ்டபட்டா அது அவருக்கு
    பிடிக்காது. அதுனால படிப்புக்கேத்த வேலை கிடைக்கலைனாலும், ஒரு நல்ல வேலையா பாருன்னு சொன்னாரு. இப்போ அவருக்கு அத சொல்லி புரியவைக்கிற தகுதி வந்துருச்சு. என்ன இலக்கியம் சம்மந்தப்பட்ட விஷங்கள்ள ஊகுவிச்சதே அவருதான். தமிழ் எனக்கு நிறைய கற்று கொடுத்து, எழுத்து பேச்சு, கவிதை நடை எல்லாமே எனக்கு கற்றுகொடுத்தது என்னோட அப்பா தான். இப்போ எங்க வீட்டுல எல்லாருமே ஹேப்பி தான்.

    அப்டியே ஹேப்பியா அவோரோட பயணம் தொடர நம் வாழ்த்துகள்..!

    English summary
    Actor, Singer, Lyricts And multiple Talented Mr. Arunraja kamaraj's interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X