Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அஜீத் ரசிகர்களுடன் மோதல் வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
சென்னை: அஜீத் ரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார்.
நடிகர் விஜய் ட்விட்டர் தளம் மூலம் ரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும்...
ஜில்லா வெற்றி
‘ஜில்லா' படம் வெற்றி பெற்றது பற்றி?
‘ஜில்லா' படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணமாக இருந்த எனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விக்ரம்
தமிழ் படஉலகில் உடம்பை வருத்தி கடுமையாக உழைக்கும் நடிகர் யார்?
சீயான் விக்ரம்.
மோதல்
உங்கள் ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதே?
தயவுசெய்து இதுபோன்ற தகராறுகளில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற மோதல்கள் ஆரோக்கியமானது அல்ல.
ரசிகர்களே...
ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
உங்கள் வேலையை நன்றாக செய்யுங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
லாலேட்டன்...
மோகன்லாலுடன் நடித்தது பற்றி?
மோகன்லாலுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. மலையாள படமொன்றில் அவருடன் இணைந்து நடிக்க ஆசை.
தமிழ்தான்
இந்தி படத்தில் நடிப்பீர்களா?
நமக்கு எப்பவும் நம்ம தமிழ்நாடுதான்னா...
எதிர்ப்பாளர்களுக்கு
உங்களை எதிர்க்கும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள்?
அவர்களையும் நான் விரும்புகிறேன்.