»   »  திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை சமந்தா ஏன் நிறுத்த வேண்டும்? - நாக சைதன்யா

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை சமந்தா ஏன் நிறுத்த வேண்டும்? - நாக சைதன்யா

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருமணத்துக்குப் பிறகும் சமந்தா நடிப்பார். முழுக்குப் போட மாட்டார் என்று நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்யவிருக்கிறார் நடிகை சமந்தா.

இந்த சூழலில் நாக சைதயன்யாவிடம் சமந்தா குறித்து கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்...

I wont stop Samantha from acting after marriage - Naga Chaithanya

சமந்தா உங்களுக்காக மதம் மாறிவிட்டாராமே?

அதில் உண்மையில்லை. அப்பா ஒரு பூஜைக்கு அழைத்தார். நானும், சமந்தாவும் போனோம். அவ்வளவுதான். அந்த புகைப்படத்தில் சமந்தா பொட்டுடன் இருப்பதை வைத்து இப்படியொரு வதந்தியை கிளப்பியுள்ளனர்.

மதம் மாறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. சாதி, மதத்தை வைத்து ஒருவரை நான் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் என்னுடைய விருப்பம்.

I wont stop Samantha from acting after marriage - Naga Chaithanya

சமந்தாவிடம் உங்களுக்குப் பிடித்தது?

வெளிப்படையானவர், நேர்மையானவர். மனதில் இருப்பதை அப்படியோ சொல்லிவிடுவார். அந்த குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

உங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்ததுண்டா...?

சினிமா பற்றி அடிக்கடி கருத்து விவாதங்கள் வரும். குறிப்பாக நாங்கள் ஒப்புக் கொள்ளும் படங்கள் பற்றி. கருத்து வேறுபாடுகள் வந்தாலும் நிலைக்காது.

திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிப்பாரா?

திருமணத்துக்குப் பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பார். அவர் நடிப்பதை நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.

I wont stop Samantha from acting after marriage - Naga Chaithanya

ஏன்...?

சினிமாவில் நான் இந்த இடத்தில் இருக்க குடும்பப் பின்னணிதான் காரணம். ஆனால், சமந்தா போன்றவர்கள் எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைகிறார்கள். அது வலி நிறைந்த பயணம். மிகுந்த கஷ்டத்துக்குப் பிறகே இந்த இடத்துக்கு வருகிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு வந்த இடத்தை திருமணத்துக்குப் பிறகு இழந்துவிட வேண்டும் என்பது சரியல்ல. எனவே, திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று சொல்ல மாட்டேன்.

எப்போது திருமணம்?

அடுத்த ஆண்டு. தேதி இன்னும் முடிவாகவில்லை.

English summary
Naga Chaithanya says that he would never stop Samantha from acting after their marriage.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos