»   »  பெண்களைப் பெருமைப்படுத்தும் இது நம்ம ஆளு!- சிம்பு

பெண்களைப் பெருமைப்படுத்தும் இது நம்ம ஆளு!- சிம்பு

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வகையிலும் இருக்கும் இது நம்ம ஆளு திரைப்படம், என்கிறார் சிலம்பரசன்.

சர்ச்சை நாயகன் சிம்பு நடிப்பில், வருமா வராதா என்று கேள்வியுடன் இன்னும் பெட்டிக்குள் இருக்கும் படம் இது நம்ம ஆளு. கடைசியா மே 27 ரிலீஸ் தேதி என்று அறிவித்துள்ளனர்.


இந்தப் படம் குறித்து சிம்பு தந்துள்ள பேட்டி இது:


'இது நம்ம ஆளு' போன்ற உணர்ச்சிகரமான காதல் கதையில் நான் பயணித்தது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு முழு காரணாமாக செயல்பட்டு, பல கடினமான தருணங்களில் பொறுமையைக் கையாண்ட இயக்குநர் பாண்டிராஜுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.


நன்றி நயன்தாரா

இந்த படத்துக்காக தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது மட்டுமில்லாமல், தனித்துவமான நடிப்பால் ஒட்டு மொத்த படக்குழுவினரையும் கவர்ந்த நயன்தாராவுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன்.


குடும்பங்களைக் கவரும்

காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு படம். இளைஞர்களை மட்டுமின்றி அனைத்து குடும்பங்களையும் கவரும் விதத்தில் இந்த படம் இருக்கும். இதற்கு உறுதுணையாக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன்.


பெண்கள் இல்லாமல் எதுவுமில்லை

நம் வாழ்க்கையில் பெண்கள் இல்லாமால் எதுவும் இல்லை. ஒரு அம்மாவாகவும், தங்கையாகவும், அக்காவாகவும், என அவர்களின் பங்கு நம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே போகும். அத்தகைய மகிமை மிகுந்த பெண்மையை மிக அழகாக இந்த படத்தில் கூறியுள்ளோம்.


டிஆர், குறளரசனுக்கு நன்றி

எனக்கு பக்கபலமாக இருந்து, இந்த படத்தை பல தடைகளுக்கு பிறகு வெளியிட பாடுப்பட்ட எனது தந்தைக்கும், இந்த படத்திற்கு ஏற்ற பாடல்களை அளித்த இசை அமைப்பாளர் குறளரசன் அவருக்கும் எனது நன்றிகளை கூறிக் கொள்கிறேன்.


ரசிகர்கள்

அனைத்துக்கும் மேலாக, என்னுடைய முதுகெலும்பாக செயல்படும் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் என் இரு கரம் குவித்து நன்றிகளை சொல்லி கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கு நான் தலை வணங்கி நன்றிகளை கூறுகிறேன்," என்றார்.


English summary
Simbu says that his forthcoming film Ithu Namma Aalu will glorify women society
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos