» 

இது நேர்மைக்கு கிடைத்த விருது - 'வாகை சூட வா' சற்குணம்!

Posted by:

வாகை சூட வா படத்துக்குக் கிடைத்துள்ள விருது நேர்மையான சினிமாவுக்கு கிடைத்த கவுரவம் என்றார் இயக்குநர் சற்குணம்.

தமிழில் சிறந்த படமாக வாகை சூட வா படத்தைத் தேர்ந்தெடுத்து தேசிய விருது அறிவித்திருக்குறது மத்திய அரசு.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் சற்குணம் கூறுகையில், "நேர்மையாகவும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் எடுத்த படம் இது. இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். மக்களுக்கு இன்னும் நல்ல கருத்துக்களை கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தை இந்த விருது எனக்கு கொடுத்து இருக்கிறது.

தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, சின்னச்சின்ன விஷயங்களை கூட அந்த படத்தில் மிகநுட்பமாக செய்து இருந்தேன். ஒரு நகரம் உருவாவதற்கு செங்கற்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்த செங்கல் உருவாவதற்கு இயற்கை அழிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது.

விழிப்புணர்வு கருத்துகள்

வாகை சூடவா படத்தில் குழந்தை தொழிலாளர் உள்பட சில விழிப்புணர்வான கருத்துக்களையும், காதலையும் 'சென்டிமென்ட்'' கலந்து கொடுத்திருந்தேன். இந்த படத்துக்கு விருது கிடைத்து இருப்பதை மிக மிகப் பெருமையாக கருதுகிறேன்," என்றார்.

ஆரண்ய காண்டம்

அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது பெறும் ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன், சமுதாயத்தில் இருண்ட பகுதியை சித்தரிக்கும் இதுபோன்ற படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியையும் வியப்பையும் அளிப்பதாக தெரிவித்தார்.

Read more about: vaagai sooda vaa, sargunam, வாகை சூட வா, சற்குணம்
English summary
Sargunam, director of Vaagai Sooda Vaa says that the national award is a big honour to his honest effort in cinema.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos