» 

சந்திப்போமா?

 

Arjun and Laila in Giri
குளோசப் அப் விளம்பர மாடல் போல் எப்போதும் சிரித்தபடி இருந்து வந்த லைலா இப்போது கன்னத்தில் கைவைத்தபடி இருக்கிறார்.

படங்கள் எதுவும் கைவசம் இல்லாததுதான் சோகத்துக்குக் காரணம். உள்ளம் கேட்குமே(இந்த நூற்றாண்டு இறுதிக்குள் ரிலீசாகிவிடுமா?),ஜெய்சூர்யா ஆகிய படங்களைத் தவிர லைலாவின் கால்ஷீட் டைரியில் வேறு படங்களின் பெயர்களே இல்லை. கம்பீரம் படத்துக்குப் பிறகு பட வாயப்புகள் குவியும் என்று எதிர்பார்த்து சொந்த செலவில் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்தார்.வாய்ப்புகள் வரவில்லை. ரூம் பில் எகிறியதுதான் மிச்சம்.

Laila
இனி இங்கிருந்தால் கட்டுபடியாகாது என்று புரிந்து கொண்டு மும்பைக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்தார். விமானநிலையத்திற்கு கிளம்பும் முன் அவர் அளித்த பேட்டியில்,

எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது எனது சுபாவம். 5 நிமிடம் இருக்கச் சொல்லி விக்ரம் என்னிடம் பந்தயம் கட்டினார். ஆனால் 20விநாடிகளிலேயே சிரித்து பந்தயத்தில் தோற்று விட்டேன்.

திருமணம் எல்லாம் இரண்டு வருடத்துக்குப் பிறகுதான். வருங்காலக் கணவரைப் பற்றி கற்பனைகள் எதுவுமில்லை. காதல் திருமணமாஎன்பதை இப்போதே கூற முடியாது.

நந்தா, பிதாமகன் படங்களுக்கு அடுத்து ஜெயசூர்யா படத்தில் வித்தியாசமான கேரக்டர் கிடைத்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்தநடிகையும் இந்த மாதிரி கேரக்டரில் நடிக்கவில்லை. இந்தப் படம் நிச்சயம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். அடுத்து ஒரு ரவுண்ட்வருவேன் என்று கூறியபடி மும்பை போய் விட்டார் லைலா.

ஒரு புன்னகை தேசம் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்து போய்விட்டதே என்ற கவலையில் இருந்த நமக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்தது. லைலாமும்பையில் தனது வீட்டிற்குப் போய் சேர்ந்தாரோ இல்லையோ அவருக்கு ஒரு வாய்ப்பு போய் சேர்ந்தது.

இயக்குநர் பாலாவின் உதவியாளர் ஒருவர் இயக்குநராக அறிமுகமாகும் ஆச்சார்யா என்ற படத்தில் லைலாவுக்கு கதாநாயகி வேடம். கரைகடந்த புன்னகைப் புயல் விரைவில் தமிழகத்தைத் தாக்கும்.

Read more about: arjun, bala, cinema, films, giri, laila, movies, tamil news, tamilnadu, thatstamil

Tamil Photos

Go to : More Photos