» 

சினிமாவில் போலீஸ், அரசியலில் அக்யூஸ்ட்டாகப் பார்க்கிறார்கள்: சீமான்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சினிமாவில் போலீஸ், அரசியலில் அக்யூஸ்ட்: சீமான்
சென்னை: சினிமாவில் தன்னை போலீசாகவும், அரசியலில் அக்யூஸ்ட்டாகவும் பார்ப்பதாக நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ள கண்டுபிடி கண்டுபிடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய சீமான் கூறுகையில்,

நான் இதுவரை 5 படங்களில் நடித்துள்ளேன். அதில் 3 படங்களில் போலீசாக நடித்துள்ளேன். உச்சிதனை முகர்ந்தால் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடி கண்டுபிடி படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று அந்த படத்தின் இயக்குனர் என்னை கேட்டார்.

அந்த படத்திலும் போலீசாகத் தான் வருகிறேன் என்று பதில் அளித்தேன். சினிமாவில் என்னை போலீசாகப் பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் அக்யூஸ்ட்டாகவல்லவா பார்க்கிறார்கள் என்றார்.

அரசியலில் பிசியாக இருந்தாலும் சீமான் நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பதால் சினிமாவில் நடித்து வருகிறார்.

Topics: tamil cinema, seeman, சீமான்
English summary
Naam tamilar party chief cum director Seeman has told that people in cine field are looking him as a police while political field as accused.

Tamil Photos

Go to : More Photos